உயிர்த்தெழுதலின் சாட்சியம் 58-0406E 1. [சகோதரன் வில்லியம் பிரான்ஹாம் அவர்களுடைய பாடப் பகுதியாயுள்ள லூக்கா 14:1-32 வரையிலான வசனங்கள் சகோதரன் ஆர்மன் நெவில் அவர்களால் வாசிக்கப்படுகின்றன. ஆசி.] வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலை கவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர்கள் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே. இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டு போனான். அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமையில் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்து போனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்க முகமுள்ளவர்களாய் வழி நடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர், எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே: அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்தீரிகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, 2 சகோதரன் நெவில் உங்களுக்கு நன்றி. உங்கள் யாவருக்கும் ஒரு “மாலை வணக்கம்”. 3 இந்த நாள், இது எனக்கான ஒரு மகத்தான நாளாய் இருந்து வருகிறது. இது அநேக வழிகளில் மகத்தானதாய் இருந்து வருகிறது. உண்மையாகவே நான் இன்றைக்கு சற்று வயதானவனாகிவிட்டேன். ஆகையால் அது சற்று பெரியவனாக்குகிறது. நான் ஒரு மேலான வயதை அடைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான்…இது ஒரு மகத்தான நாளாய் இருந்து வருகிறது, ஏனென்றால் இது ஈஸ்டராயுள்ளது. ஆகையால் ஒரு மகத்தான நாள், ஏனென்றால் இந்த நாளில் ஏதோ ஒரு காரியம் எனக்கு சம்பவித்துள்ளது. நான் அதைப் பெற்றுள்ளேன், ஒருபோதும் அதை மறக்கவும் மாட்டேன். அது என் இருதயத்தில் உண்டான ஒரு வாஞ்சையாயிருந்தது. அதாவது நான்… 4 நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன் என்றும், அந்தக் காரியங்களைக் குறித்தும் நான் என் வாழ்நாளல்லாம் வியந்திருக்கிறேன். 5 அதன் பின்னர் நான் இந்தக் காலையில், நான் மோசேயைக் குறித்து பேசிக்கொண்டிருந்ததை சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவன் ஒரு எபிரேயனாயிருந்தான் என்பதை அவன் அறிந்துகொண்டபோது, அவனுக்கு அவனுடைய சிந்தையில் என்ன தோன்றியிருக்க வேண்டும். ஏன் தேவன் அவனை பார்வோனுடைய அரண்மனையிலே வளரும்படி அனுமதித்துவிட்டு, அதன் பின்னர் அந்த இடத்திலிருந்து எடுத்து, வாழ்க்கையில் அவன் என்ன செய்ய வேண்டியவனாயிருந்தான் என்பதை கண்டறியும்படிக்கு வனாந்திரத்தின் பின்பக்கத்திலே உள்ள ஒரு இருப்பிடத்தில் இருக்க வைத்தார்? 6 ஒரு பையனாய் இருந்ததிலிருந்தே எப்படியாய் அந்த தேவன் ஆரம்ப நாட்களிலிருந்து என்னண்டை பேசிக்கொண்டு வந்திருந்தார் என்று நான் அடிக்கடி வியப்புற்றிருக்கிறேன். அதன்பின்னர் அவர் ஏன் அந்தப் புகைப்படம் எடுக்கப்படும்படிக்கு அனுமதித்தார் என்று நான் வியப்புறுகிறேன். அவர் ஏன் அதை ஜெர்மனியிலும், பின்லாந்திலும் செய்தார் என்று நான் வியப்புறுகிறேன். இந்தக் காரியங்களெல்லாம் ஏன் சம்பவித்திருக்கின்றன என்று நான் வியப்புற்றிருக்கிறேன். அதை என்னால் நம்பமுடியவில்லை…ஏனென்றால் அது…காரணம் நான் ஒரு பிரசங்கி அல்ல; நான் கல்விப் பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. நான் ஒரு பிரசங்கியாய் இருக்கும்படியான திறமையை உடையவனாயிருக்கவில்லை. அது வித்தியாசமான ஏதோ ஒரு காரியமாய் இருக்க வேண்டும். தேவனுடைய ஜனங்கள் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் மனிதனின் பாரம்பரியத்தின் காரணத்தால் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இன்றைக்கோ மருத்துவ விஞ்ஞானம் அணுக முடியாத வியாதிகளினால் அனுதினமும் மரிக்கிற இலட்சக்கணக்கானோரை நாம் உடையவர்களாயிருக்கிறோம். அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றனர். நான்—நான் அதைக் காணும்படி உயிரோடில்லாமலிருக்கலாம்…நான் நம்புகிறேன். ஆனால் ஒரு நேரம் வரப்போகிறது என்றும், அது சமீபத்தில் இருக்கலாம் என்றும், அதாவது தேவன் இன்னமும் சர்வவல்லமையுள்ள தேவனாயிருக்கிறார் என்று நிருபிக்கும்படியாக இந்த வகையில் ஏதோ ஒரு காரியத்தைச் செய்யப்போகிறார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். நான்—நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை ஓர் அளவு முறையில் கண்டிருக்கிறேன், ஆனால் அது நாம் காணப்போகும் ஒரு சிறு அளவு முறையாய் இருந்தது என்றே நான் நம்புகிறேன். இப்பொழுது, நான் கொஞ்ச காலம் இளைப்பாறுதலுக்காக இக்காலையில் செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். 7 இன்றைக்கு, நான் அந்தத் தண்ணீரில்…நான் அநேக முறைகள் ஞானஸ்நானங் கொடுத்துள்ளேன், ஆனால் என் வாழ்க்கையில் நான் எப்போதும் குளிரடைந்ததைக் காட்டிலும் அதிக கடுங்குளிரடைந்தேன். என்னால் பேச முடியாத அளவிற்கு நான் அவ்வளவு கடுங்குளிரடைந்தேன். அது “பணி மிகுதியினால் மெலிவுற்றுப்போனதன்” காரணமாயிருந்தது. நான் கிறிஸ்துமஸ் முதற்கொண்டு இல்லை சரியாக கிறிஸ்துமஸிற்கு பிறகே ஓர் இரவுகூடத் தங்கி இளைப்பாறாமல் சென்றுகொண்டேயிருக்கிறேன். எனக்கு மோசமான ஜலதோஷம் இல்லை ஆனால் நான் சற்று பலவீனமடைந்து, பணி மிகுதியினால் மெலிவுற்றுப் போயிருக்கிறேன். 8 கர்த்தருக்குச் சித்தமானால் நாளை நான் ஒரு சில தினங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும்படியாக ஏரிக்குச் செல்லப் போகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் ஒரு சில தினங்களிலேயே நான் திரும்பி வந்துவிடுவேன். எனவே தேவனுக்குச் சித்தமானால் சுமார் பத்து, இப்பொழுதிலிருந்து கிட்டத்தட்ட இருபது நாட்கள் நடைபெறவுள்ள ஆராதனைகளுக்கு நான் வெளியே செல்வதற்கு முன்னர் நாம் மீண்டும் ஒன்றுகூடி சந்திப்போம். 9 அதன்பின்னர் நான் இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் நியூ இங்கிலாந்தில் உள்ள மாநிலங்களுக்கு திரும்பச் செல்கிறேன்…திரும்பி வருவேன்…அது இரண்டு நாட்கள், இரண்டு அல்லது மூன்று நாட்கள் தவிர மே மாதம் முழுவதுமாயிருக்கிறது. 10 அதன் பின்னர் அங்கிருந்து நான் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் வரையில் இடையில் எனக்கு ஏறக்குறைய ஐந்து நாட்களுக்கு மேல் இருக்காது. அது ஜூன் மாதம் முழுவதுமானதாயிருக்கிறது. 11 எனவே அது கடினமானதாயிருக்கிறது. நான் எனக்காக ஜெபிக்கிற இந்தச் சிறு சபையின் பேரில், இந்த ஜனங்களின் பேரில்தான் சார்ந்திருக்கப் போகிறேன்; ஏனென்றால் எனக்கு அது தேவை, அது மிக அவசியமான தேவையாயிருக்கிறது. 12 மகிமையின் இந்தப் பக்கம் உள்ள யாவும் என்னவாயிருந்து வருகிறதென்றும், எப்படிப்பட்ட போராட்டங்களினூடாக நான் செல்ல வேண்டியதாயிருக்கிறதென்பதையும் எவருமே அறிந்து கொள்ள மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அதை ஜனங்களுக்கு கூறுகிறதில்லை. அதை ஜனங்களுக்கு கூற வேண்டியதில்லை. அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நானும் அதை புரிந்துகொள்ளுகிறதில்லை. அது ஏதோ ஒரு காரியமாயிருக்கிறது. எனவே, நீங்கள் தொடர்ந்து முன் செல்லுங்கள், அப்படியேத் தயக்கமின்றி முன் செல்லுங்கள். 13 இப்பொழுது, நின்றுகொண்டிருக்கிற ஜனங்கள் மிக நீண்ட நேரம் நிற்க வேண்டியதாயிராது. சகோதரன் நெவில் சற்றுமுன் வாசித்திருக்கிற உயிர்த்தெழுதலைக் குறித்தான லூக்கா 24-ம் அதிகாரத்தில் உள்ள இந்த வேதப்பகுதியையே இன்றிரவு ஒரு பாடப் பகுதியாக நான் தெரிந்தெடுத்துள்ளேன். இன்றிரவு என்னுடைய தலைப்பு உயிர்த்தெழுதலின் சாட்சியம் என்பதாகும். இப்பொழுது அவர் வாசித்துக்கொண்டிருக்கையில் அதில் அவர் பேசியிருந்த அநேகக் காரியங்கள் இருந்தன. இங்கே நான் அதைக் குறிப்பிட்டுக் கூறவிரும்புகிறேன். அதாவது முதலில் இவர்கள் காலையில் கல்லறைக்குச் சென்றிருந்தனர். 14 இப்பொழுது அவர் எவ்வளவாய் மரித்தார் என்பதும், அவருடைய மரணம் எவ்வளவு துயரார்ந்ததாய் இருந்தது என்பதும் முக்கியமன்று, ஆனால் உயிர்த்தெழுதல் இல்லாமலிருந்தால் அவர் மரித்துப்போன ஒரு மனிதனாயிருந்திருப்பார். புரிகிறதா? 15 நம்முடைய உலகத்தில் மகத்தான உரிமைக் கோரிக்கைகளை நிலைநாட்டியிருக்கிற அநேக மகத்தான மனிதர்கள் இருந்து வந்திருக்கின்றனர். 16 உதாரணமாக கன்ஃபூசியஸ், மகத்தான தத்துவ ஞானி சுமார் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மரித்துப் போய்விட்டார். 17 புத்தர், ஜப்பானின் மகத்தான தீர்க்கதரிசி—கடவுள், அவரும் கூட ஏறத்தாழ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மரித்துவிட்டார்; மகத்தான கூற்றுக்களை நிலைநாட்டினார். ஆனால் அவர் மரித்துப்போய்விட்டார். அவர் கல்லறையில் தரித்திருக்கிறார். 18 முகமது, அவருடைய கல்லறையிலே இருக்கின்ற சிலாக்கியமென்னவெனில், அங்கே இரண்டாயிரம் ஆண்டுகளாக அவருடைய கல்லறையிலே வெள்ளைக் குதிரை நிற்கிறது; அதில் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை காவலர்கள் மாற்றப்பட்டு, என்றோ ஒரு நாள் அவர் எழும்பி வந்து, உலகத்தைச் சுற்றிலும் சவாரி செய்து, அதை ஜெயங்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமதியர்கள், அவர்களுடைய மார்க்கம் உலகத்திலேயே பெரிதான எண்ணிக்கைக் கொண்ட மார்க்கமாயுள்ளது. எல்லாக் கிறிஸ்தவர்களையும், கத்தோலிக்கர்களையும் ஒன்று சேர்த்தாலும் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருக்கின்றனர். ஆனால் முகமதுவோ இன்னமும் கல்லறையில் இருக்கிறார். 19 நாம், “இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறார்” என்று கூறும்போது, இந்த எல்லா மார்க்கங்களில் உள்ளவர்களுமே, “அதை நிரூபியுங்கள்” என்று கூறுகின்றனர். அப்பொழுது நாமோ, “நல்லது, அவர் எங்களுடைய இருதயத்தில் இருக்கிறார்” என்றே கூறுகிறோம். அதற்கு இவர்களுடைய ஸ்தாபகர் ஓர் இருதயத்திற்குள் இருக்கிறார் என்றே அவர்கள் கூறுகிறார்கள். 20 ஆனால் இயேசுவானவர் நம்மை ஒரு திடமான, அவருடைய உயிர்த்தெழுதலின் அஸ்திபாரக் கன்மலையின் மேல் இருக்கும்படி விட்டுள்ளார் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் வியப்படைய வேண்டியதில்லை. அது சத்தியமாயிருக்கிறது. அதாவது அந்த வியப்பூட்டும் காரியம் என்னவெனில் அநேக ஜனங்கள் அதைக் காண்கிறதில்லை என்பதேயாகும். நான் அதைக் குறித்து வியப்படைந்திருக்கிறேன். எனவே நான் இன்றிரவு வேதாகமத்தின் மூலம் அதை அணுக முயற்சிக்கப்போகிறேன். 21 இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், இவர்கள் அதிகாலையில் கல்லறையில் இருந்தனர். அவர்கள் இரண்டு பேரை சந்தித்தனர், அவர்கள் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்திருந்த தூதர்களாயிருந்தனர். அவர்கள் இவர்களிடத்தில், “அவர்…உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?” என்றார்கள். அவர்கள் கல்லறையினிடத்திற்குச் சென்று அவர்கள், “உயிரோடிக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன என்று இந்தக் குறிப்பிடத்தக்கக் கேள்வியைக் கேட்டு, அவர் கூறின…அவர் கலிலேயாவிலிருந்தக் காலத்தில் உங்களுக்கு இந்தக் காரியங்களைச் சொன்னாரே” என்றுக் கூறினார்கள். 22 இப்பொழுது, நீங்கள் ஒருகால் அதைக் குறித்து மேலோட்டமாகப் படித்திருக்கலாம், ஆனால் நாம் அதைச் சற்று நேரம் ஆராய்ந்துப் பார்ப்போமாக. அவர், “இந்தக் காரியங்களை அவர் உங்களுக்கு கலிலேயாவிலிருந்தக் காலத்தில் சொன்னார்” என்று கூறினார். அவர்கள் ஏன் அதைப் புரிந்து கொள்ளவில்லை? அவர்கள் ஏன் அதை மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை? 23 இங்கே அதற்கு மற்றொரு மகத்தான முக்கியத்துவம் உண்டு. அதாவது இதை அவருக்குச் சொன்னவர்கள் இல்லை கல்லறையண்டையிலே இந்த சீஷர்களுக்குச் சொன்னவர்கள், அவர்களுங்கூட கலிலேயாவில் அவரோடு இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் இயேசுவானவர் தம்முடைய சிலுவையேற்றத்திற்கு முன்னர் அவர்களிடத்தில் கூறியிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஓ, என்ன ஓர் ஆசீர்வதிக்கப்பட்டக் காரியம்! நீங்கள் பாருங்கள், அந்த தூதர்கள் அங்கே இருந்தனர் என்பதை அந்தச் சீஷர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் அங்கே இருந்தது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால் அவர்கள், “அவர் கலிலேயாவிலிருந்தக் காலத்தில் உங்களுக்கு இதை அவர் சொல்லவில்லையா?” என்றுக் கூறினர். 24 அது, “தேவனுடையத் தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கியிருக்கிறார்கள்” என்று கூறப்பட்டுள்ள வேதவாக்கியத்தை நிறைவேற்றுகிறது. 25 அதை அறிந்துகொள்வது என்ன ஒரு மகத்தான காரியமாய் உள்ளது. இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் தேவனுடைய தூதர்கள் கவனமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். நாம் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும், நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். 26 இதோ அதைக் குறித்த வேதப்பிரகாரமான நிரூபணம் உள்ளது. “கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்கு இந்தக் காரியங்களைச் சொல்லவில்லையா?” மேலும், “அவர் இந்தக் காரியங்களை உங்களுக்குக் கூறினார் என்பதை நினைவுகூருங்கள்” என்றார்கள். அந்த வார்த்தை, “நினைகூருங்கள்” என்பது ஒரு வியப்பூட்டக்கூடிய ஒரு வார்த்தையாயுள்ளது. 27 ஓ, இழக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் தங்களுடைய ஆக்கினைத் தீர்ப்பை முத்திரையிட்டப் பிறகும், அவர்கள் தங்களுடையக் கடைசி பிரசங்கத்தைக் கேட்டப் பிறகும், ஒரு பிசாசினுடைய நரகத்தில் இருக்கப்போவது, இழக்கப்பட்டு, மனந்திரும்ப வாய்ப்பேயில்லாமல் இருக்கப்போவதும், அவர்கள் புறக்கணித்திருக்கிற சந்தர்ப்பங்களை நினைவுகூருவதும் என்ன ஒரு விசனமுள்ள காரியமாய் இருக்கிறது. 28 நீங்களோ என்னிடத்தில், அப்படியானால், “பிரசங்கியாரே, பாதாளத்தில் நினைவுகூருதல் உண்டா?” என்று கேட்கலாம். இயேசுவே உண்டு என்று கூறினார். அவர் ஐசுவரியவான் தன் கண்களை பாதாளத்திலே ஏறெடுத்துப் பார்த்தபோது, அவர் ஆபிரகாமையும், அவருடைய மடியில் லாசருவையும் கண்டான் என்று அவர் கூறினார். “அப்பொழுது அவர், ‘உன்னுடைய ஜீவியகாலத்தை…நினைத்துப் பார்’” என்றார். ஒரு நினைவுகூருதல் உண்டு. 29 இழக்கப்பட்டவர்கள் அறிந்துகொள்ளும்படி பெரிய கூட்டங்களில் அமர்ந்திருந்தும், தேவனுடைய அபிஷேகிப்பட்ட ஊழியர்களின் வல்லமையான பிரசங்கங்களை கேட்டிருந்ததும், அது மட்டுமின்றி, தேவன் ஜனங்களுக்கு நிகழ்த்தியிருந்த அபிஷேகிப்பட்ட அடையாளங்களையும், அதிசயங்களையும் காணும்படியிருந்ததும், அதன்பின்னர் இந்த எல்லா எச்சரிப்புக்களையும் நினைவுகூர்ந்து, அதே சமயத்தில் இழக்கப்பட்டிருப்பது எப்படிப்பட்ட ஓர் அச்சந்திருக்கிறக் காரியமாய் இருக்கும். ஏன், அது அவர்களை என்றென்றைக்குமாய் நினைவூட்டி அலைக்கழிக்கும். 30 இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, “அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார், அந்த ஆவிகள் தேவன் நோவாவின் நாட்களில் நீடியப் பொறுமையோடே காத்திருந்தபோது, மனந்திரும்பாமற்போனவைகள்” என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது. ஒரு மேசியா வரப்போவதாயிருந்தார் என்று சாட்சி பகர்ந்த நோவா, ஏனோக்கு மற்றும் அவர்களுடைய நாட்களின் மகத்தான தீர்க்கதரிசிகளை அவர்களுடைய நினைவுகூருதலுக்கு கொண்டு வரும்படிக்குச் சென்றார். அவர்கள் அந்தச் செய்தியைப் புறக்கணித்துவிட்டிருந்தனர். 31 ஓ, இழக்கப்பட்ட என்னுடைய நண்பனே உனக்காக நினைவு கூரும்படியான அந்த நாளில் அது ஒரு பயங்கரமான காரியமாய் இருக்கும். நீ இங்கே மரிக்கும்போது, உன்னுடைய கிரியைகள் உன்னைப் பின்தொடரும். அவைகள் ஒன்று நித்தியத்தினூடாக உன்னை விட்டு ஓயாமல் நினைவுகளில் அலைக்கழிக்கும் அல்லது நித்தியத்தினூடாக உன்னை ஆசீர்வதிக்கும். 32 ஆனால் நினைவிருக்கட்டும், இரட்சிக்கப் பட்டிருக்கிறவர்களுக்கோ அது என்ன ஒரு மகத்தான காரியமாய், ஒரு சந்தோஷமாய், உண்மைகளைச் சந்திக்கும்படி நினைவிற்குக் கொண்டு வரக்கூடியதாயும், இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் இருக்கிற தூதர்களையும், மகத்தான கூட்டங்களையும், மகத்தான நேரங்களையும், நாம் ஒருமித்து அனுபவத்திருந்த மகத்தான சந்தோஷத்தின் நினைவுகூருதலுமாய் இருக்க வேண்டும். அது இரட்சிக்கப்பட்ட மற்றும் இரட்சிக்கப்படாத இரு குழுவினருக்குமே முன்னால் உள்ள என்ன ஒரு நேரமாய் இருக்க வேண்டும்! 33 தேவன் ஒரு நல்ல தேவனாயிருக்கிறார். அவர் மிகவும் நீடியப் பொறுமையுள்ளவராயிருக்கிறாரே! அவர் மிகுந்த தயவு, சாந்தம், பொறுமை நிறைந்தவராயிருக்கிறாரே! “அவர் ஒருவரும் கெட்டுப்போகாமலிருக்கச் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” அவர் மனுஷரை அழிந்துபோவதிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ள செய்யப்படக்கூடிய ஒவ்வொரு காரியத்தையும் செய்திருக்கிறார். ஆயினும் அவர்கள் எப்படியாயினும் அழிந்துபோவார்கள், ஏனென்றால் அவர்கள் விசுவாசிக்கிறதில்லை. 34 இப்பொழுது நாம் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் இருந்த இரண்டு மனுஷரை காணும்படி இன்றிரவு நம்முடைய ஆய்வினைத் தொடருவோம். அநேகர் வந்து ஒரு காலியான கல்லறையைக் குறித்துக் கூறிவிட்டு, அவருடைய சரீரம் அங்கு இல்லை என்றும் கூறியிருந்தனர். சில ஸ்திரீகள், “அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார்” என்று அவர்களிடம் கூறினத் தேவதூதரைத் தரிசித்தோம் என்றும் கூறியிருந்தனர். அதே சமயத்தில் இந்த எல்லா செய்தியையுமே இன்னமும் இந்த ஜனங்கள் விசுவாசிக்காமல் திடனற்றுப்போய், வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தனர். 35 அந்த முதலாம் ஈஸ்டரில், அந்த அழகான இளவேனிற் பருவகால ஈஸ்டர் காலையில் இயேசுவானவர் ஜனங்களுக்கு மத்தியில் உயிரோடிருக்க, இந்த ஜனங்களோ திடனற்றுப்போய், வீதியினூடாக நடந்துகொண்டு, துக்கங்கொண்ட இருதயங்களோடும், சிலுவையிலறைந்ததைக் குறித்து கலக்கமடைந்ததோடும் தொடர்ந்து செல்வதைக் குறித்து எண்ணிப்பாருங்கள். அவர்கள் நடந்து சென்றபோது, யாரோ ஒருவர் வீதியின் ஓரத்திலிருந்து நடந்து வந்து அவர்களோடு பேசத் துவங்கினார் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர் யாராயிருந்தார் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர், ஏனென்றால் அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது என்று வேதவாக்கியம் கூறுகிறது. 36 ஓ, இங்கேதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஏதோ ஒரு காரியம் சம்பவித்ததாய் மட்டுமில்லாமல், இது ஒரு தீர்க்கதரிசனமாயும், சம்பவிக்கப்போவாயிருந்த ஏதோ ஒரு காரியத்தின் நிழலாயும் இருந்தது. 37 நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தர் எந்தக் காரியத்தையுமே ஒருபோதும் கிட்டத்தட்ட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும்படியாக செய்ததேயில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் செய்த ஒவ்வொரு காரியமும் ஒரு பொருளைக் கொண்டிருந்தது. அவர் செய்த ஒவ்வொரு காரியமும் நித்தியமானதாயிருந்தது. அது ஒருபோதும் மரித்துப் போய்விடவில்லை; ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சைகையும், ஒவ்வொரு வார்த்தையுமே மரித்துப்போய்விடவில்லை. ஓ, அதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உங்களுக்குள்ளே எல்லாவற்றைக் கொண்டும் அதற்குள்ளாக உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்ள முடியும். அப்பொழுது அது வெளிப்படுத்தப்படும். 38 அவர்கள் வீதியினூடாக நடந்து சென்றபோது, ஓர் அந்நிய மனிதன்கூட நடந்து சென்றார். அவர்கள், அப்பொழுது அவர்—அவர் அவர்களிடத்தில், “நீங்கள் ஏன் மிகவும் துக்கமாயிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் மகிழ்ச்சியாய் இருந்திருக்க வேண்டும். எனவே அவர், “நீங்கள் ஏன் மிகுந்த துக்கமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்? நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிறக் காரியங்கள் என்ன?” என்று கேட்டார். அவர் கூறினார்… 39 அதற்கு அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக, “நீர் எருசலேமுக்கு ஓர் அந்நியரோ? சம்பவித்துக்கொண்டிருக்கிறக் காரியங்களை நீர் அறிந்திருக்கவில்லையா? நாங்கள் நசரேயனாகிய இயேசு என்னும் பெயர் கொண்ட ஒரு தீர்க்கதரிசியை உடையவர்களாயிருந்தோம். அவர் விடுவிப்பவராயிருப்பார் என்று நாங்கள் அவரில் நம்பிக்கைக் கொண்டிருந்தோம். ஆனால் எங்களுடைய ஜனங்கள் அவரை சிலுவையிலறைந்தனர், இது சம்பவித்து இன்று மூன்றாம் நாளாயிருக்கிறது” என்று கூறினார்கள். 40 அவர்கள் என்ன சம்பவித்திருந்தது என்ற சம்பவத்தைக் குறித்தும், அவர் எப்படி மரித்திருந்தார் என்பதைக் குறித்தும், அவர்கள் எப்படி அவரை மகத்தான விடுவிப்பவராக எதிர்பார்த்திருந்தனர் என்பதையும் கூறத்துவங்கினர். ஆனால் எப்படியாய் அந்த உன்னதமான தேவனுடையத் தீர்க்கதரிசியால் அங்கே தம்முடைய முகத்தில் துப்பின எச்சிலோடும், ஒரு போர்ச்சேவகன் அவருடைய தலையைச் சுற்றி ஒரு கந்தைத் துணியைக் கட்டி அவருடைய கண்களை மூடி, ஒரு கோலினால் அவருடையத் தலையின்மேல் அடித்து, “இப்பொழுது தீர்க்கதரிசனம் உரை. நீர் தீர்க்கதரிசனம் உரைப்பவராயிற்றே, உன்னை அடித்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும். அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம்” என்று கூறும்படி அனுமதித்துவிட்டு, இரக்கத்தோடு நிற்க முடிந்தது. அது ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. மேசியா அப்படியில்லாமல் வித்தியாசமான ஒருவராய் இருப்பார் என்றே அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். 41 இன்றைக்கு அது ஓர் உண்மையான காட்சியாய் இருக்கிறதல்லவா? ஜனங்கள் உண்மையாகவே தேவனுடைய இராஜ்ஜியம் இருப்பதைக் காட்டிலும் வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது பகட்டாரவாரமாய் வரும்படிக்கே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை வாடிகன் நகரத்தில் அல்லது ஏதோ ஒரு பெரிய மாதாக்கோயிலில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை ஒரு கூட்ட ஏழைகளின் மத்தியிலும், படிப்பறியாதவர்கள் மத்தியிலும், தாழ்மையான இருதயங்கொண்டவர்களுக்கு மத்தியிலும் கொண்டு வருகின்றபடியால், அது ஞானிகளின் கண்களையும், கல்விமான்களின் கண்களையும் குருடாக்குகிறது. 42 ஓ, அந்தப் பெண்மணி தன்னுடையத் தலை முடியினால் அவருடையப் பாதத்தைத் துடைத்தது என்னே ஒரு பரியாசமாயிருந்தது. அவள் உண்மையான விசுவாசியாயிருந்தபடியால் அதைச் செய்திருந்தாள். அவர் சிலுவையின் மேல் தம்முடையக் கரங்கள் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டிருப்பதோடு அங்கே தொங்கிக்கொண்டிருப்பதைக் காண்பதும், பிரதான ஆசாரியன் “இப்பொழுது, நீர் தேவனுடையக் குமாரனேயானால், இங்கே ஓர் அற்புதத்தை நிகழ்த்தும். அப்படியே உம்முடையக் கரங்களை அவிழ்த்துக்கொண்டு சிலுவையிலிருந்து கீழே இறங்கிவாரும், அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம்” என்று கூறினதைக் கேட்பதும் என்னே ஒரு பரியாசமாயிருந்தது. 43 இப்பொழுது இயற்கையான மனிதனுடைய சிந்தையில் உள்ள மாம்சப்பிரகாரமான மனிதன், சபை மனிதன், பாவனை விசுவாசி, காரணம் ஒவ்வொரு சபையும் மூன்று வகையான வித்தியாசமான ஜனங்களைக் கொண்டுள்ளது, அது உண்மையான விசுவாசி, பாவனை விசுவாசி மற்றும் அவிசுவாசி என்பதாகும். ஒவ்வொரு சபையும் அவர்களை உடையவர்களாயிருக்கிறது. 44 இந்த மனிதன் குருடரின் கண்களைத் திறந்திருந்தவர், செவிடரின் செவிகளின் அடைப்பை எடுத்துவிட்டவர், ஒரு மனிதன் மரித்துப்போய் நான்கு நாட்களாகியும், அவனை உயிரோடெழுப்பினவர், அவர் செய்த இப்படிப்பட்டக் காரியங்களைப் பட்டியலிட முடிந்தவர், அங்கேத் தன்னுடைய முகத்தின்மேல் எச்சிலோடு தொங்குவதையும், ஒரு பிரதான ஆசாரியன் அவர்மேல் பழி சுமத்துவதையும், இப்படிப்பட்ட காரியங்களை அவர் மீது கூற, அவரோ தம்முடைய வாயை ஒருபோதும் திறவாமல், விசாரணையில் ஒரு வார்த்தையும் திருப்பிக் கூறாததையுங் குறித்து எண்ணிப் பாருங்கள். ஏனென்றால் அவர், “நான் தேவனுக்குப் பிரியமானதையே எப்பொழுதும் செய்கிறேன்” என்றார். அது அவ்வாறு நிகழ வேண்டும் என்பது தேவனுக்கு பிரியமாயிருந்துக் கொண்டிருந்தது. 45 இப்பொழுது நாம் அவரை ஒரு சில நிமிடங்கள் கவனிப்போம். இப்பொழுது இந்த சீஷர்களால், இது ஏன் நடைபெற வேண்டும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால் அவர்கள் நெடுக நடந்து செல்கையில் இந்தச் சம்பவத்தைக் கூறிக்கொட்டித் தீர்க்கத் துவங்கினர், அப்பொழுது இயேசு அவர்களை நிறுத்தினார். நீங்கள் பாருங்கள், அவர்கள் அவரைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் அவர்களுக்கு பிரசன்னமானார். 46 அந்தக் காரணத்தினால் இன்றைக்கு அவர் அநேக சபை ஜனங்களுக்குப் பிரசன்னமாகிறதில்லை, ஏனென்றால் அவர்கள் அவரைக் குறித்துப் போதுமான அளவு பேசுகிறதில்லை. சபையானது எப்பொழுதுமே அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற சில பெரிய காரியங்களைக் குறித்தும் சில பெரிய சமூகவிருந்துகளைக் குறித்தும் அல்லது அவர்கள் சென்று கொண்டிருக்கிற சில வனபோஜன இடங்களைக் குறித்தும் அல்லது அவர்கள் செய்யப் போவதாயிருக்கிற சில புதிய ஏதோ ஒன்றைக் குறித்தும், சில சங்கங்களைக் குறித்துமே பேசிக்கொண்டிருக்கிறது. சபையானது கிறிஸ்துவுக்கான எந்த இடத்தையும் வைத்திராத அளவிற்கு அது சங்கங்களால் மிகவும் பாரமடைந்துள்ளது. 47 உண்மையான சபையோ ஒரு ஜெப கூட்டத்திற்கும், அவரை அறிந்து அவரை நேசிக்கிறவர்களுக்காக எல்லாவற்றையும் வெறுத்தொதுக்கி, இந்த எல்லா சங்கங்களையும் குறித்து எப்போதுமே பாரமடைந்திராததாயிருக்கிறது. 48 இந்த விதத்தில்தான் அவர் இருந்தார். அவர் பிரசன்னமானபோது, அவர்கள் அவரைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். 49 நாம் நம்முடைய அண்டைவீட்டாரைக் குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, சபையில் உள்ள மாய்மாலக்காரர்களைக் குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, இயேசுவைக் குறித்து அதிகமாய் பேசுவோமேயானால், அப்பொழுது நாம் அதிகமாக இயேசுவின் பிரசன்னமாகுதலை உடையவர்களாயிருப்போம்; பிரசங்கிமார்களின் பிழைகளைக் குறித்துப் பேசுவதையும், மற்ற ஏதோ ஒரு காரியத்தின் தவறுகளைக் குறித்துப் பேசுவதையும் விட்டுவிடுவோமேயானால் நலமாயிருக்கும். ஆனால் இயேசுவைக் குறித்து அதிகம் பேசினால், அப்பொழுது அதிகமானக் காரியங்கள் சம்பவிக்கும். இப்பொழுது, அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பிரசன்னமானார். 50 அதன்பின்னர், கவனியுங்கள், அவர் பிரசன்னமாகிறபோது, அவர் உங்கள் பட்சமாய்ச் சேர்ந்துகொள்ளத் துவங்குகிறதில்லை. “ஓ, அது உண்மை, இந்த ஒருவர் நீக்கப்பட வேண்டும், இந்த புதிதான ஒரு மேய்ப்பரை கொண்டிருக்க வேண்டும். அல்லது அந்த அண்டைவீட்டார் உங்களுக்கு தவறு செய்துவிட்டார்”. 51 பாருங்கள், அவர் பிரசன்னமானவுடனே, அவர் வார்த்தையைப் பிரசங்கிக்கத் துவங்கினார். ஓர் உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் எப்போதுமே வார்த்தைக்கேச் செல்கிறான். அவர், “கிறிஸ்துவைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே” என்றார். பாருங்கள், எப்படியாய் அவர் அதை அதற்குள் கொண்டு வந்தார்? “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களாயிருக்கிறீர்களா?” 52 அவர் இன்றிரவு பிரசன்னமானால் என்னவாகும்? நான் இதைக் கேட்க விரும்புகிறேன். அவர் இன்றிரவு பிரான்ஹாம் கூடாரத்திலே என்ன செய்வார்? நீங்கள் மந்த இருதயமுள்ளவர்களாயிருக்கிறீர்களா? 53 இருபத்தைந்து வருடங்களாக சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு, அடையாளங்களும், அதிசயங்களும், அற்புதங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நடைபெற்று வருகிற ஜெபர்ஸன்வில்லில் இன்றிரவு அவர் என்ன செய்வார்? இயேசுவானவர் இப்புவியைவிட்டுச் சென்றது முதற்கொண்டே ஒருபோதும் செய்யப்பட்டிராத காரியங்கள் அனுதினமும் நிகழ்கின்றதே. வியாதியஸ்தர் சுகமடைகின்றனர், அடையாளங்களும், அற்புதங்களும் நிகழ்ந்தேறுகின்றன. மகத்தான தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டு, அவை ஒருபோதும் தவறிப்போகிறதில்லை. சுவிசேஷமானது எதற்காகவும் ஒப்புரவாகாமல் பிரசங்கிக்கப்பட்டு, இன்னமும் ஜெபர்ஸன்வில்லில் மதுபானம் அருந்தும் அறைகளும், கேவலமான மதுபானக் கடைகளும் இன்றிரவும் மட்டுமீறி நிரம்பியிருக்கின்றன. ஓ எப்படி நாம் தேவனுடையக் கோபாக்கினைக்குத் தப்பித்துக் கொள்ள முடியும்? 54 நான் இதை அநேகமுறை கூறியிருக்கிறேன், அதே சமயத்தில் நான் அதை இன்றிரவும் கூறுகிறேன். தேவன் நம்மை தண்டிக்காமல் விட்டுவிடுவாரேயானால், அப்பொழுது அவர் அநீதியுள்ள தேவனாயிருப்பார். நாம் அனுதினமும் செய்து கொண்டிருக்கிற காரியங்களையே, செய்துகொண்டு, இன்னமும் மோசமாகிக்கொண்டேயிருக்கிற இதேக் காரியத்தைச் செய்ததற்காக சோதோம் கொமாராவை மூழ்கடித்ததற்காக அவைகளை எழுப்பி அவர் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிருக்கும். இருந்தாலும் அவர்கள் ஒரு கூட்ட அஞ்ஞான ஜனங்களாய் இருந்தனர். ஆனால் நாமோ ஒரு கிறிஸ்தவ தேசமாகக் கருதப்படுகின்றோம். 55 அவர் அவர்களிடத்தில் பேசினபோது, வேதவாக்கியங்களை அவர்களுக்கு விளக்கிக் கூறத்துவங்கினார். அவர் அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்துக்கொண்டு, அவர்களுக்கு சில சிறு குழந்தை உபதேசத்தை மாத்திரம் கூறிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் அவர்களைக் கடிந்துகொண்டு, “நீங்கள் புத்தியில்லாதவர்கள், மந்த இருதயமுள்ளவர்கள். நீங்கள் தீர்க்கதரிசி கூறினதை ஏன் சந்தேகப்பட்டீர்கள்?” என்று கேட்டார். அவர் எங்கே சென்றார் என்று பார்த்தீர்களா? நேரடியாக வேத வாக்கியத்திற்கேச் சென்றார். 56 அவர்கள் கவனித்து, செவிகொடுக்கத் துவங்கினர். அவர், “கிறிஸ்து மூன்றாம் நாள் எழுந்திருந்து, தமது மகிமையில் பிரவேசிக்க வேண்டியதில்லையா?” என்றார். அவர் நெடுக நடந்து செல்கையில், நாள் முழுக்க பேசிக்கொண்டேச் சென்றார். அதே சமயத்தில் அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை, ஏனென்றால் அவர்களுடையக் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தன. எனவே அவர்களால் அவரைக் காணமுடியவில்லை இல்லை அவரை அறிந்துகொள்ள முடியவில்லை. 57 இப்பொழுது இங்கேதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதுவே உயிர்த்தெழுதலுக்குப் பின்னான முதலாம் செய்தியாயிருந்தது. அவர் முழு நாளும் அவர்களோடு நடந்து சென்றபோதும், அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. அதே சமயத்தில் அவர் அவர்களோடு இருந்தார், ஆனால் அவர்தாமே அவர்களுடையக் கண்களை மறைத்திருந்தார். ஆனால் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தபோது, இயேசு அவர்களைக் கடந்து தாம் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். 58 அவர் அதையே சரியாக மீண்டும் இந்தக் கடைசி நாட்களில், சாயங்கால சூரியன் அஸ்தமன நேரத்தில் செய்திருக்கிறார் அல்லவா? அப்பொழுது அவர் நாள் முழுவதும் சபைக்கு என்ன அளித்தார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? வார்த்தையை பிரசங்கித்தார். அவர் ஒருபோதும் ஓர் அடையாளத்தையோ அல்லது அற்புதத்தையோ நிகழ்த்தவேயில்லை. அவர் ஒருபோதும் வேறெந்தக் காரியத்தையும் பேசவேயில்லை, ஆனால் உயிர்த்தெழுதலைக் குறித்து காரியத்தையும், தீர்க்கதரிசி என்னக் கூறினார் என்பதையுங் குறித்து பிரசங்கித்தார். அவர் புறப்பட்டுச் சென்ற நாட்கள் முதற்கொண்டு இந்தக் கடைசி நாட்கள் வரைக்குமே அதைத்தான் செய்துள்ளார். ஆனால் இப்பொழுதோ, ஓ, அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக, சூரியனோ அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது, அவர் நில்லாமல் போகிறவர்போல் காணப்பட்டார். 59 ஓ, ஃபேனிகிராஸ்பி, “ஓ சாந்தமான இரட்சகரே, என்னைக் கடந்து செல்லாதேயும்” என்று கதறியழுவதைக் குறித்து என்னால் எண்ணிப்பார்க்க முடிகிறது. 60 இந்த சீஷர்களோ, “வந்து தங்கியிரும், இருட்டிய நேரத்தில் எங்களோடே தங்கியிரும், ஏனென்றால் பொழுதும் போய்க்கொண்டேயிருக்கிறது” என்றனர். அவரோ அப்புறம் போய்க் கொண்டிருக்கிறவர்போலக் காண்பித்தார், ஆனால் அவர்கள் அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் அவரை கெஞ்சி மன்றாடினர். ஓ, நாம் அதிகமாகக் கெஞ்சி மன்றாடும் ஜனங்களின் மாதியிரியாயிருந்தால் நலமாயிருக்குமே! 61 சகோதரியே, சகோதரனே, நகரத்தில் செய்யப்படும் அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிறவர்களின் நெற்றிகளில் பரிசுத்த ஆவியானவர் அடையாளம் போடுவதாக வேதம் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்களா? இப்பொழுது, நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நாம் நம்முடைய மார்க்க ரீதியான கருத்துகளின் பேரில் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறோம். ஆனால் இன்றிரவு ஜெபர்ஸன்வில்லில், இந்த நகரத்தில் இழந்துபோன உலகத்தைக் குறித்து மிகுந்த அக்கறைக்கொண்டு, நகரத்தின் பாவங்களுக்காக ஓர் இரவு முப்பது நிமிடங்களாவது ஜெபிக்கும்படி செலவழிக்கக் கூடியது யார்? ஆனால் வேதவாக்கியத்தின்படி தேவனுடைய தூதனானவர் அருவருப்புகளுக்காகப் பெருமூச்சுவிட்டழுகிறவர்களுக்கு மாத்திரமே முத்திரையிட வேண்டியதாயிருந்தது. 62 நாம் அக்கறையே கொண்டிருக்கவில்லை. நாம் அநுபவிக்க முடிந்த ஒரு நல்ல நேரத்தை அறிந்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். நாம் நம்முடைய சபையில் ஒரு சிறு சங்கத்தை வைத்துக் கொள்ள முடியும் என்பதை அறிந்துகொள்ள நாம் விரும்புகிறோம். நாம் அடுத்த போதகரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வருகிறபோது நாம் வைத்துள்ள ஒரு வாக்கெடுப்பு வரப்போவதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். அடுத்த நபருடைய சபையைக் காட்டிலும் நம்முடையச் சபையானது சற்று மேலானதாகக் காணப்படவே நாம் விரும்புகிறோம். அதுவே இன்றைக்கு இந்த உலகத்தினுடைய எண்ணமாயிருக்கிறது. எவருமே, “ஓ தேவனாகியக் கர்த்தாவே, சீக்கிரமாய் என்னிடத்திற்கு வாரும், இல்லையென்றால் நான் அழிந்துபோவேன். ஓ, என்னை கடந்து செல்லாதேயும், ஓ இரட்சகரே. நீர் சர்வ வல்லமையுள்ளவர், சர்வ வியாபியாயிருக்கிற நீரே வந்து என் இருதயத்தில் வாசஞ்செய்யும், ஓ கர்த்தாவே” என்று கெஞ்சி மன்றாடுகிறதில்லை. ஒரு புருஷனோஅல்லது ஸ்திரீயோ கர்த்தராகிய இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளத் தங்களுடையக் கரத்தை உயர்த்துவதும் கூடக் கடினமாகவே இருக்கிறது. பண்டைய நாகரீக துயருறுவோரினுடைய இருக்கையே எடுக்கப்பட்டாயிற்று. எந்தப் புலம்பலுமே இப்பொழுது இல்லை. பீடத்தண்டைக் கதறியழுவதேக் கிடையாது. 63 சார்லஸ் G.பின்னி என்ற ஒரு சுவிசேஷ பிரசங்கியார், மனமாற்றமடைந்த வழக்கறிஞர், மெலிந்துபோன சிறு உருவங்கொண்ட தோற்றமாய்க் காணப்பட்ட நபர் ஒரு கட்டிடத்தில் ஒலியின் ஓசையை சோதித்து சரிபார்த்துக் கொண்டிருந்ததை சற்று எண்ணிப்பாருங்கள். அப்பொழுது அவர், “மனந்திரும்பு இல்லையேல் அழிந்து போ” என்று கூறிப்பார்த்தார். அப்பொழுது மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு மனிதன் மயங்கி விழுந்தான். அவர் நியூ இங்கிலாந்தில் ஒரு கட்டிடத்தின் உப்பரிக்கையில் நின்று, இழக்கப்பட்டவர்களுக்கு நரகத்தைக் குறித்துப் பிரசங்கித்தார். அப்பொழுது அவர், “நீங்கள் மனந்திரும்பவில்லையென்றால், அழிந்துபோவீர்கள்” என்று கூச்சலிட்டபோது, புருஷரும், ஸ்திரீகளும் வீதிகளில் மயக்கமுற்று விழுந்தனர். 64 ஆனால் இன்றைக்கோ நீங்கள் மனந்திரும்புதலையும், நரக அக்கினியையும், கந்தகத்தையும் குறித்துப் பிரசங்கித்தால், ஜனங்கள் அதைப் பார்த்து நகைப்பார்கள். காரியம் என்ன? நம்முடைய இருதயங்கள் குளிர்ந்துபோயிருக்கின்றன. நாம் கவலையற்றவர்களாயிருக்கிறோம். நமக்கு உலகத்தைக் குறித்து மிகக் குறைவானதும், தேவனைக் குறித்து மிக அதிகமானதுமே தேவையாயிருக்கிறது. நம்முடைய இருதயங்கள் மிகவும் குளிர்ந்து போயிருக்கிறது. நாம் ஏதோ ஓர் உணர்ச்சிவசப்படுதலில் ஆர்வமாகிவிட்டோம். நாமோ, “நம்மால் நடனமாட முடிந்தால்; நம்மால் சத்தமிட முடிந்தால்” என்பதில் ஆர்வமடைந்து விட்டோம். நான் அதில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். “நம்மால் அந்நிய பாஷைகளினால் பேச முடிந்தால் நலமாயிருக்குமே”. நான் அதில் விசுவாசங்கொண்டிருக்கிறேன். நான் அந்த ஒவ்வொன்றிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். ஆனால் நாம் அதை உடையவர்களாயிருந்து அந்த மனவேதனையையும், அழுகையையும், நொறுங்குண்ட ஆவியையும் உடையவர்களாயில்லையென்றால், தேவன் அதை ஒருபோதும் உபயோகப்படுத்தவே முடியாது. அந்தக் காரியங்கள் நன்றாயிருக்கின்றன, ஆனால் அதனோடு செல்ல வேண்டிய மற்றொன்றையும் பெற்றிருக்க வேண்டும். நாம் முக்கியமான காரியத்தை விட்டுவிட்டு, இரண்டாந்தரமானவற்றிற்காகச் சென்றுவிட்டோம்; நீங்கள் ஒருபோதும் ஒரு சிறியதன் பேரில் மிகப்பெரியதைப் பெற்றுக் கொள்ள முடியாது. நாம் அதை அறிந்திருக்கிறோம். 65 நம்முடைய சொந்தக் கூட்டங்களிலும் கூட, நம்முடைய சொந்தக் கூட்டங்களிலும் ஆத்தும சுகமளித்தலுக்குப் பதிலாக சரீரப்பிரகாரமான தெய்வீக சுகமளித்தலின் பேரிலேயே அதிகமாக இடமளித்திருக்கிறோம். சகோதரனே இன்றைக்கு நமக்குத் தேவை என்னவென்றால் தேவனுக்காக அனல் மூண்ட ஆத்துமாக்கள் பேரிலான ஓர் எழுப்புதலின் விடியலேயாகும். நான், “கொழுந்துவிட்டு எரிதல்” என்று பொருட்படுத்திக் கூறுவது பீடத்தண்டைத் தங்களுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுவதோடு முழங்காற்படியிடுவதேயாகும். ஆனால் ஐந்தே நிமிடங்களில் எழுந்து அதை மறந்துவிடுவதல்ல. ஆயினும் இழந்துபோனவர்களை மீண்டும் கிறிஸ்துவினண்டைக்குத் திரும்பக் கொண்டுவர ஆதாயப்படுத்தும்படிக்கு முயற்சித்தல்; அவர்களுடைய இருதயத்தின்மேல் உள்ள ஒரு பாரம். 66 தேவனே உலத்தின் எல்லா இன்பங்களையும் அதனுடைய எல்லா விளிம்புகளையும், அதனுடைய எல்லா விளையாட்டுகளையும் எடுத்துப் போட்டுவிட்டு, இழந்து போனவர்களுக்கான ஒரு பாரத்தை இருதயத்தின் மேல் வையும் என்பதே என் விண்ணப்பமாகும். 67 அவர்கள், “ஓ, ஆண்டவரே, ஐயா, நீர் யார் என்பதை நாங்கள் அறியோம். ஆனால் நாங்கள் உம்முடையப் பிரசங்கத்தை விரும்புகிறோம். உள்ளே வந்து, இரவு முழுவதும் எங்களோடேத் தங்கியிரும்” என்று வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். இயேசு உள்ளே சென்றார். அவர்களோடு நடந்து செல்லுகையில், அவர்கள் அவரை அறிந்திருக்கவில்லை. அவர் ஒருமுறை உள்ளே சென்றபோது…இது ஒரு சிறு குடிசையாயிருந்திருக்கலாம்; ஆனால் அவரைப் போன்று மிகத் தாழ்மையானது ஒன்றுமேயில்லை. 68 நீங்களோ, “நல்லது, சகோதரன் பிரான்ஹாமே, நான் ஒரு வயோதிக மனிதன்” என்று கூறலாம். நீங்கள் எவ்வளவு வயதானவர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. “நான் ஒரு குழந்தை.” நீங்கள் எவ்வளவு வாலிபமாக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. “நான் மிகவும் ஏழையாயிருக்கிறேன். நான் அழுக்கு வேலை செய்யும்போது அணிந்துகொள்ளும் ஒரு சாதாரண மேலாடையையே அணிந்துள்ளேன்.” ஓ, நீங்கள் உங்களை ஒரு புல் வைத்துக் கட்டும் கோணிப்பையினால் சுற்றியிருந்தாலும், அது தேவனுக்கு எந்த வித்தியாசத்தையுமே உண்டுபண்ணாது. அவரிடத்தில் கேளுங்கள். நீங்கள் தேவனுடைய பார்வையில் மகத்தானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் மனிதனுடைய முன்னிலையில் முக்கியத்துவமில்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் தேவனுடையப் பார்வையில் மகத்தானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய பிரஜைகளில் ஒருவராய் இருக்கிறீர்கள். “உள்ளே வந்து எங்களோடே தங்கியிரும்” 69 “ஓ, அவர் எனக்குள்ளாக வரும்படி என்னால் கேட்டுக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு குடிகாரனாய் இருந்து வருகிறேன். நான் ஒரு சூதாட்டக்காரனாய் இருந்து வருகிறேன்.” நீங்கள் என்னவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவரிடத்தில் வேண்டி தீர்வு காணுங்கள். அவர் உங்களுடைய அழைப்பின் பேரில் வருவார். அவர் ஒருவரையும் ஒருபோதும் புறக்கணித்திருக்கவில்லை. அவர் ஒருவரையும் ஒருபோதும் வெறுத்தொதுக்க மாட்டார். அவர் இருதங்களுக்குள் பிரவேசிக்க வாஞ்சித்துக் கொண்டும், முயற்சித்துக் கொண்டுமிருக்கிறார். நீங்களோ, “நான் ஒரு தெரு விபச்சாரியாய் இருந்து வருகிறேன்” என்று கூறலாம். நீங்கள் என்னவாக இருந்து வருகிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. தேவன் உங்களுடைய இருதயத்திற்குள்ளாகத் தம்முடைய வழியில் கிரியைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள், “கர்த்தாவே உள்ளே வந்து, என்னோடே தங்கியிரும்” என்று கூறுங்கள். 70 கவனியுங்கள், அவர் அடையாளங்களின்றி நாள் முழுவதும் வார்த்தையை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார். அவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றபோது, கதவை மூடிவிட்டு, அமர்ந்தார். ஓ, சகோதரனே, அப்பொழுதுதான் அவர் தம்முடைய உயிர்த்தெழுதலை வெளிப்படுத்தினார். அவர் அவர்களை சந்தித்தபோது காலையிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரைக்கும் அதை அவர் எந்த நேரத்திலுமே செய்யவில்லை. அவர் ஜீவியத்தில் செய்த எந்த ஒரு காரியத்தையும் ஒருபோதும் அப்பொழுது செய்யாமல், வார்த்தையை மாத்திரமே பிரசங்கித்தார். ஆனால் கவனியுங்கள், சாயங்கால நேரத்திலே, சாயங்கால நேரத்திலே, அப்பொழுதே அவர் தம்முடைய உயிர்த்தெழுதலை நிரூபித்தார். 71 நான் இதைப் பணிவோடு கூறுவேனாக. நான் இதை ஒரு நாவன்மையற்ற குரலோடும், ஆனால் ஒரு நொறுங்குண்ட இருதயத்தோடும் கூட கூறுவேனாக. இது சாயங்கால நேரமாய் இருக்கிறது. வேதம், “ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்” என்று தீர்க்கதரிசி உரைத்துள்ளார் என்று கூறியுள்ளது. அது வெளிப்படுத்துதல் இல்லாமல், வார்த்தையைக் கேட்பதாய் இருக்கும், மப்பும், மந்தாரமான ஒரு நாளாயிருக்கும். ஆனால் சாயங்கால நேரத்திலே வெளிச்சம் மீண்டும் உண்டாகும். அது வெளிச்சமாய் இருக்கும். இந்த சாயங்கால நேரத்திலே நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவானவர் அவருடைய ஊழியகாரர்களினூடாக இரண்டாயிரம் ஆண்டுகளாக சுவிசேஷத்தை பிரசங்கித்திருக்கிறார். ஆனால் இதுவோ சாயங்கால வெளிச்சமாயிருக்கிறது. சாயங்கால வெளிச்சங்கள் உயிர்த்தெழுதலின் வெளிப்படுத்துதலாய் இருந்தன. 72 எப்பொழுது? அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்துவிட்டிருந்தார் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அவர்கள் அவரை நேசித்திருந்தபோதிலும், அவர்கள் அவரை விசுவாசித்திருந்தபோதிலும், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுதுவிட்டிருந்தார் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அவர்கள் அதற்கு எதிராக விவாதித்திருந்தனர். இப்பொழுது, இதோ இது சாயங்கால நேரத்தில் உள்ளது, அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார் என்று அவர் தம்மை வெளிப்படுத்தப்போகிறார். அவர் அதை எப்படிச் செய்தார்? வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலமாயல்ல; அவர் அதை ஏற்கனவே செய்திருந்தார். ஆயினும் அவர்கள் விசுவாசிக்கவில்லை. 73 இரண்டாயிரம் ஆண்டுகளாக வார்த்தை பிரசங்கிக்கப்பட்டும் சபையானது விசுவாசிக்கவில்லை. ஆனால் சாயங்கால வெளிச்சம், உயிர்த்தெழுதலின் வெளிப்படுத்துதல் வந்துள்ளது. 74 அவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்று, அவர் ஓர் அற்புதத்தை நிகழ்த்தினார் அல்லது அவருடைய சிலுவையேற்றத்திற்கு முன்னர் அவர் செய்ததுபோன்று ஒரு காரியத்தைச் செய்தார். அப்பொழுது அது அவராயிருந்தது என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர்களுடையக் கண்கள் திறக்கப்பட்டன. 75 அப்பொழுது அவர் உடனடியாக மறைந்துபோனார். கவனியுங்கள், அது ஒரு சுருக்கமான செய்தியாயிருந்தது. அது மிக நீண்டதாயிருக்கவில்லை. அவர் அவர்களோடு நீண்ட நேரம் தரித்திருக்கவில்லை. அவர் தம்மை வெளிப்படுத்திவிட்டு, அவர்களுடையப் பார்வையிலிருந்து மறைந்துபோனார். அப்பொழுது அவர்களுடையக் கண்கள் திறக்கப்பட்டு, அது அவராயிருந்தது என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். 76 அவர்கள், “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று கூறினார்கள். 77 ஓ, சகோதரனே, சகோதரியே, அநேக வருடங்களினூடாக நம்முடைய இருதயங்கள் எவ்வளவு அதிகமாகக் கொழுந்துவிட்டு எரிந்து வந்துள்ளது. இப்பொழுது ஏறக்குறைய இருபத்தேழு வருடங்களாக, இல்லை சுமார் இருபத்தொன்பது வருடங்களாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்து வருகிறேன். நான் இருபத்தேழு வருடங்களாக ஒரு பிரசங்கியாய் இருந்து வருகிறேன். நான் அவருடைய வார்த்தையை வாசிக்கும்போதும், அவர் என்னிடத்தில் பேசுகிறபோதும், அது எப்போதுமே அற்புதமானதாயிருக்கிறது. வார்த்தையைக் கேட்பதற்கு என்னுடைய இருதயம் கொழுந்துவிட்டெரிகிறது. 78 ஆனால் இப்பொழுதே சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது. சூரியனோ அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. நாகரீகமோ போய்விட்டது. உலகமோ முடிவிலே இருக்கிறது. இப்பொழுது அவர் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாய் தம்மை வெளிப்படுத்த நம் மத்தியில் பிரசன்னமாகி ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறார். நம்முடையக் கண்கள் திறக்கப்பட முடியும். அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார் என்பதை நாம் காணமுடியும். தின்பதால் தெரியும் பணியாரத் திறம். அதுவே உயிர்த்தெழுதலின் நிரூபணமாயிருக்கிறது. வேதம், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று இயேசு வாக்களித்ததைக் கூறியிருக்க, அவரோ அதை நிரூபிக்கவில்லையென்றால், அப்பொழுது அந்த வேதவாக்கியம் தவறாயிருக்கிறது. இத்தனை வருடங்களாக நாம் இந்த எல்லா வேதவாக்கிய உபதேசங்களையும் உடையவர்களாயிருந்து வந்துள்ளோம். ஆனால் இதுவோ வெளிப்படுத்துதலுக்கான, உயிர்த்தெழுதலின் வெளிப்படுத்துதலுக்கான நாளாய் இருக்கிறது. 79 இப்பொழுது, அவர்கள் என்ன செய்தனர்? அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டபோது, அவர்கள், “நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்றுக் கூறினர். அப்பொழுது அவர்கள் மற்றத் தங்களுடைய ஜனங்களைச் சந்திக்க துரிதமாக விரைந்து சென்றனர். அவர்கள் இப்பொழுது திரும்பிச் செல்லாமல், சாலையிலேயே நடந்துகொண்டு, “நல்லது, அது ஏதோ ஒரு காரியமாய் இருந்திருக்கக்கூடும்” என்று கூறிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமுள்ளவர்களாயிருந்தனர். ஆகையால் அவர்கள் தங்களுடைய சொந்தக் கூட்டத்தாரிடம் விரைந்து சென்று, “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்திருக்கிறார் என்பது உண்மையே! அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை நாங்கள் அறிவோம்” என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் தங்களுடைய மார்க்கத்தைக் குறித்து விவாதிக்கச் செல்லவில்லை. அவர்களுடையக் கண்கள் திறக்கப்பட்டிருந்த காரணத்தால் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலில் அவரைக் கண்டிருந்தனர் 80 என் நண்பனே, இன்றிரவு இது என்ன ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த அழகான காரியமாய் இருக்கும்? இன்றிரவு இந்த ஈஸ்டர் தினத்திலே இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மூவாயிரம் டாலர்களுக்குக் குறைவான கிரயப்பெறுமானத்திற்கு நமக்கு கொள்ளப்பட்ட இந்தச் சிறிய, பண்டைய, தாழ்மையான இந்த கூடாரத்திற்கு மத்தியில் இங்கே உயிர்த்தெழுந்த அந்த மாறாத இயேசுவானவர் வருவதைக் காண்பதென்பது என்ன ஒரு மிக முக்கியத்துவ வாய்ந்த மகிமையான காரியமாய் இருக்கும்? இன்றிரவு இந்தச் சிறியத் தாழ்மையான ஸ்தலத்திற்கு அவர் இங்கே வருவதைக் காண்பதும், அவருடைய உயிர்த்தெழுதலை நிரூபிக்க அவருடையச் சிலுவையேற்றத்திற்கு முன்னர் அவர் செய்த காரியங்களைச் செய்வதும் எப்படியாயிருக்கும்? 81 அவர் அதை இந்தக் கடைசி நாட்கள் வரையிலும் ஒருபோதும் செய்திருக்கவேயில்லை. இப்பொழுது அவர் அதைச் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணினக் காரணத்தால் அவர் அதைச் செய்துகொண்டிருக்கிறார். இது சாயங்கால நேரமாயிருக்கிறது. வெளிச்சங்கள் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன. தேவன் தம்முடையப் பிள்ளைகளின் கண்களைத் திறந்துகொண்டிருக்கிறார். அவர்கள் களிப்பான இருதயங்களோடு, “ஓ, அவர் உண்மையாக உயிர்த்தெழுந்திருக்கிறார்” என்றுக் கூறும்படித் திரும்ப விரைந்து கொண்டிருக்கின்றனர். 82 இப்பொழுது, இன்றிரவு அநேகமாக இந்தக் கட்டிடத்தில் உள்ள ஜனங்கள் வெர்ஜினியாவிலிருந்தும், தேசத்தைச் சுற்றிலும் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் வந்திருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, இயேசு அவர்களுக்குச் செய்ததுபோல, உங்களுக்கு அவர் பிரசன்னமானால், நீங்கள் இந்த ஈஸ்டர் நாளிலே ஒரு களிப்பான இருதயத்தோடு திரும்பிச் செல்ல முடியும். 83 நீங்கள் அவரோடு ஒரு நீண்ட நேரம் நடந்திருக்கலாம். அநேக வருடங்களாக நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து வந்திருக்கலாம், ஆனால் நீங்கள் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட உயிர்த்தெழுதலின் அவருடைய வல்லமையை இன்னமும் ஒருபோதும் காணாதிருக்கலாம். ஓ, அவர் அதை இன்றிரவு செய்வாரேயானால், நீங்கள் அவரை உயிர்த்தெழுந்த கர்த்தராக ஏற்றுக்கொள்வீர்களா? 84 நாம் ஜெபத்திற்காக இப்பொழுது சற்று நேரம் நம்முடையத் தலைகளை வணங்கியிருக்கையில், இப்பொழுதே அதைக் குறித்து சிந்தித்துப்பாருங்கள். எத்தனைபேர் இந்த ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? உங்களுடையக் கரத்தை தேவனண்டை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 85 தேவனாகிய கர்த்தாவே இப்பொழுது ஜனங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்களுடையக் கைகால்கள் மரத்துப்போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், ஓ, அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள். கர்த்தாவே, அவர்கள் இந்த உயிர்த்தெழுதலின் நாளின் பேரில் வந்திருக்கிறார்கள். அப்பொழுது ஒருகால் எங்கோ உள்ள பழைய காலியான கல்லறையிலிருந்து வந்திருக்கலாம். அங்கே அவர்கள் காலியான சுவிசேஷத்தைப் பிரசங்கித்து. “நல்லது, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று கூறியிருந்திருக்கலாம். அந்த விதமாகவே அவர்கள் அந்தக் கல்லறையைக் கண்டுள்ளனர். ஏனென்றால் அவர் அங்கில்லை. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். 86 ஆனால் கிலெயோப்பாவும் அவருடைய நண்பனும் அவரோடு வீதியில் பயணம் செய்து வெறுப்பு கொண்டிருந்தது போன்று இன்றிரவு அநேகர் உள்ளனர். ஆனால், ஓ கர்த்தராகிய இயேசுவே இந்தச் சாயங்கால நேரத்தில் இன்றிரவு இந்த சிறு சபைக்கு உம்முடைய உயிர்த்தெழுதலை நீர் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். தாழ்மையாய் அருகே நின்று கொண்டிருக்கிற இவர்களுக்கு நிரூபித்துக்காட்டும். அது…அது எவ்வளவுத் தாழ்மையாயிருக்கிறது என்பது ஒரு பொருட்டல்ல. நீர் வரவேற்கப்படுகிற எந்த இடத்திற்கும், நீர் தேவைப்படுகிற எந்த இடத்திற்கும், நீர் வருவீர். 87 கர்த்தாவே இங்கு அநேகர் தேவையுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர் சுகவீனமாயிருக்கிறார்கள், அநேகர் வேதனையுற்றிருக்கிறார்கள். அநேகர் உம்மையில்லாமல், கிறிஸ்துவில்லாமல், தேவனில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. பிதாவே, நீர் இன்றிரவு இந்தச் சிறிய கூடாரத்திற்கு இன்னும் ஒருவிசை நீர் உம்மையே வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 88 ஓ தேவனாகிய கர்த்தாவே, நீர் உம்முடைய ஊழியக்காரருக்கு நல்லவராக இருந்து வருகிறீர். அநேக ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பண்படாததாய்க் காணப்படுகிற ஒரு சிறு பண்டைய மரக்குடிலில், அங்கே பின்னால் அமர்ந்து கொண்டிருக்கும் தாயார் சுமார் பதினைந்து வயதினைக் கொண்டவளாய் இருந்தபோது, அந்தக் குடிலின் ஜன்னலை அதிகாலையில் திறந்தபோது, நான் முதன் முறையாக என்னுடைய சிறு குரலில் அழுதேன். ஓ தேவனாகிய கர்த்தாவே, நான் ஒவ்வொரு வருடத்திற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். நான் தவறாகச் செய்திருக்கிற அநேகக் காரியங்களைக் குறித்து நான் வெட்கமடைந்திருக்கிறேன். நீர் என்னை மன்னியும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நான் ஒரு குழந்தையான குட்டிப் பையனாய் இருந்தபோது நான் உம்மை சேவிக்கவில்லை என்று ஒரு வருத்தம் எனக்கு உண்டு. கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும். 89 ஓ கர்த்தாவே, நான் உம்முடையப் பார்வையில் கிருபைப் பெற்றிருப்பேனேயானால், இந்தப் பலவீனமான சரீரத்தைப் பெலப்படுத்தும். என்னுடையப் பெலனைப் புதுப்பியும். நீர் கழுகுகளுக்குச் செய்கிறதுபோல என்னுடைய வாலவயது பெலத்தைப் புதுப்பித்து, கர்த்தாவே, என் தலையை உயர்த்தி, அதே சமயத்தில் ஜனங்களுக்கு உம்முடைய அன்பை வெளிப்படுத்தி நான் நடக்கும்படி என் இருதயத்தைத் தாழ்த்தும். நான் உம்மை சேவிக்கும்படி எனக்கு ஆழமான அன்பையும், அதிகமான அர்ப்பணிப்பையும், ஓர் ஆழமான, தூய ஜீவியத்தை, வண்ணாருடைய வெளுப்பாக்கப்பட்ட வஸ்திரம் போன்ற தூய ஜீவியத்தைத் தாரும். 90 கர்த்தாவே, வியாதியஸ்தரையும், அவதியுறுவோரையும் சுகப்படுத்துவதன் மூலம் உம்முடைய உயிர்த்தெழுதலை சாட்சிப் பகரும்படிக்கு இன்றிரவு ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை வெளிப்படுத்தும். நாங்கள் உமக்கு துதி செலுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 91 சகோதரி கெர்ட்டி (Gertie) எனக்கு அது பிடிக்கும். எத்தனை பேருக்கு, “பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ளத் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்” என்ற பாடல் தெரியும்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] நாம் அதை அப்படியே ஒருமுறை இப்பொழுது ஒருமித்து ஒருவிதமாக வாய்த் திறவாமல் மௌனமாய்ப் பாடுவோமாக. நான் நேசிக்கிறேன்…இந்தப் பண்டைய நாகரீகப் பாடல்களை எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? [“ஆமென்.”] ஓ, நீங்கள் உங்களுடைய சற்று பழமையை மாற்றிவிட்டுள்ள கிறிஸ்தவமார்க்கத்தின் பெயரில் உள்ள எல்விஸ் பிரஸ்லி, பூகி—வூகி பாடல்களை எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்தப் பண்டைய—நாகரீக, ஆழ்ந்த உணர்ச்சிகளை எழுப்புகிற, சுவிசேஷ அன்பின் கீதங்களை எனக்குத் தாருங்கள். ஆம், ஐயா. பரிசுத்தரே, பரிசுத்தரே, பரிசுத்தரே, சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகமும், பூலோகமும் உம்மால் நிறைந்துள்ளன, ஒ உன்னதமான கர்த்தாவே பரலோகமும் பூலோகமும் உம்மை துதித்துக் கொண்டிருக்கின்றன. 92 அது உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறதல்லவா? நாம் இப்பொழுது அதை மீண்டும் பாடுகையில், அப்படியே ஒருமித்து, இப்பொழுது ஆராதிப்போம். நாம் பாடுகையில், இப்பொழுது அப்படியே தேவனுக்கு ஆராதனை செய்வோம். அப்படியே உங்களை ஒருவிதமாக நெருக்கமாக்கிக்கொண்டு இப்பொழுதே ஆராதியுங்கள். பரிசுத்தரே, பரிசுத்தரே, பரிசுத்தரே, சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகமும், பூலோகமும் உம்மால் நிறைந்துள்ளன, ஒ உன்னதமான கர்த்தாவே பரலோகமும் பூலோகமும் உம்மை துதித்துக் கொண்டிருக்கின்றன. 93 உன்னதமான தேவனாகிய கர்த்தாவே, நீர் சூரியனை அதனுடைய கோளப்பாதையில் வைத்தீர். நீர் சந்திரனையும், நட்சத்திரங்களையும் ஸ்தாபித்தீர். நீர் பூமியை உம்முடைய உள்ளங்கையில் அளவிட்டு, நட்சத்திரங்களை ஊதினீர். நீர் தேவனாகியிருக்கிறீர். நீர் மரித்தோரிலிருந்து இயேசுவை ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழும்பி, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியை எங்களுக்கு அளிக்கும்படி அவரை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தீர். நாங்கள் இப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து சமாதானத்திலும் நீதியிலும் பூமியை அரசாளப்போகும் அவருடைய வருகைக்காகவே காத்திருக்கிறோம். நாங்கள் அங்கே யுத்த ஆலோசனையே செய்யமாட்டோம். அங்கே பசியோ, துக்கமோ ஒருபோதும் இருக்காது. அங்கு ஒருபோதும் துயரமே இருக்காது. ஒருபோதும் மரணமும் இருக்காது. முந்தின காரியங்கள் ஒழிந்து போகும். ஓ, தேவனே, அது மிகவும் சமீபத்தில் உள்ளதே! 94 உம்முடையப் பிள்ளைகளுடைய இருதயங்களைப் பெலப்படுத்தும். எங்களுடைய வாஞ்சைகளை இன்றிரவே எங்களுக்குத் தாரும். எங்களுக்காக அல்ல கர்த்தாவே, ஆனால் நாங்கள் எங்களுடைய இருதயத்தில் அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்துப் புதிதான சாட்சியை உடையவர்களாயிருப்போமாக. நீர் எனக்கு உதவி செய்யும்படி என்னுடைய இருதயத்தை தாழ்த்தி வேண்டிக்கொள்கிறேன். நாங்கள் ஒருமித்து உயிர்த்தெழுந்த கர்த்தரைக் காணும்படிக்கு நீர் கூட்டத்தாருக்கு உதவி செய்யும்படியாய் அவர்கள் தங்களுடைய இருதயங்களை தாழ்த்தி வேண்டிக்கொள்கிறார்கள். 95 கர்த்தாவே எங்கள் மத்தியில் வாரும். இந்தச் சபையை பரிசுத்தப்படுத்தும். நான் தேவனுடைய இரக்கங்களுக்காக வேண்டுகிறேன். கர்த்தாவே, எங்களை நியாயந்தீர்க்காதேயும். நாங்கள் நியாயத்தீர்ப்பைக் கேட்கவில்லை. நாங்கள் இரக்கத்திற்காக வேண்டுகிறோம். எங்களுக்கு இரக்கத்தைத் தாரும், ஒ நித்திய தேவனே, உம்முடைய அன்பையும், பிரசன்னத்தையும் வெளிப்படுத்தும், நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 96 ஓ, நான் அதிகமாக ஆராதிப்பதைப் போன்று உணருகிறேன். என்னுடைய இருதயம் நிரம்பியுள்ளதே! என்னே ஒரு உறுதி! இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துள்ளாரே. 97 இது இரவோடிரவாகக் குழந்தைகளின் காலுறைகளில் கிறிஸ்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத் தெய்வம் (Santa Claus) போன்ற ஒரு கதை அல்ல. நான் உங்களுடையப் பிள்ளைகளுக்கு முன்பாக தவறான ஏதோ ஒன்றைக் கூறிக்கொண்டிருப்பேனேயானால், நீங்கள் என்னை மன்னியுங்கள்; நான் அவ்வாறு பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால் நான் பிள்ளைகளுக்குச் சத்தியத்தைச் சொல்வதில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். புரிகிறதா? 98 நான் சத்தியத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் இயேசுவைக் குறித்து என்னிடம் கூறினார்கள். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அது ஓர் ஆன்மீக சார்பானக் கதையாகும். அவர் உயிர்த்தெழுந்த தேவனாயிருக்கும்படி தம்மை அவர் நிரூபிக்கவில்லையென்றால் அப்பொழுது அவர் மரித்துப் போயிருக்கலாம். 99 ஆனால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார், அவர் இப்பொழுது ஜீவிக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர் இங்கே இருக்கிறார். அந்த பரிசுத்த இடத்தைக் குறித்து நான் இந்தக் காலையில் பேசினதுபோல, உங்களுடைய இருதயத்திலிருந்து அதை எவருமே அசைக்க முடியாது. யாத்திரிகனே இன்றிரவே தேவன் உன்னுடையக் கண்களைத் திறந்து, அவருடைய குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்து, தம்மை வெளிப்படுத்த இங்கே இருக்கிறார் என்று உன்னை அறிந்து கொள்ளும்படிச் செய்வாராக. 100 இப்பொழுது, எத்தனை பேர் ஜெபிக்கப்படுவதற்காக இருந்தனர் என்று நான் பில்லியிடம் கேட்டேன். அவனுக்குத் தெரியவில்லை. சுகவீனமான சரீரங்களில் இங்கே இந்தக் கட்டிடம் முழுவதிலும் உள்ளவர்களில் எத்தனை பேர் ஜெபித்துக்கொள்ள விரும்பி, உங்களுடையக் கரங்களை உயர்த்துகிறீர்கள். கட்டிடத்தில் எங்கும் அதைச் செய்ய விரும்புகிறார்கள். அது மிகவும் அதிகமாயிருக்கும், பாருங்கள், அது முழுவதுமே…அது கூட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதியினராயுள்ளது. எனவே ஒரு ஜெப வரிசையினூடாக அதைக் கொண்டு வர முயற்சிப்பதற்கு அது மிகவும் அதிகமாயிருக்கும். நம்மால் அதைச் செய்ய முடியாது. நான் ஜெப அட்டைகளைக் கொடுக்கும்படி அவனிடம் கூறினேன். நாம் அவர்கள் எத்தனைபேரை வரிசையினூடாகக் கொண்டுவர முயற்சிக்க முடியுமோ அவர்களைக் கொண்டுவரலாம். எனவே நான்…யூகிக்கிறேன்…நீங்கள் நூறு ஜெப அட்டைகளைக் கொடுத்துள்ளீர்களா? சரி, ஆம், அவன் நூறு ஜெப அட்டைகளைக் கொடுத்திருக்கிறான். கட்டிடத்திலோ சுமார் இருநூற்று ஐம்பது பேருக்கு மேல் ஒழுங்குபடுத்தி ஏற்பாடு செய்ய முடியாது என்றும் நான் யூகிக்கிறேன். எனவே அநேகமாக இங்கே எத்தனை… 101 எத்தனை பேர் ஒரு ஜெப அட்டை இல்லாமல் இருந்தும், தேவன் உங்களைச் சுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? கட்டிடம் முழுவதிலும் உள்ளவர்களில் ஒரு ஜெப அட்டை இல்லாமல் இருப்பவர்களே, நீங்கள் உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள். ஏறத்தாழ அவர்களில் பாதிபேருக்கு இல்லை. சரி இப்பொழுது நாம் செய்யக்கூடியது ஒரே ஒரு ஒழுங்கான வழி மாத்திரமே உண்டு. 102 என்னுடைய சிந்தையில் ஏதோ ஒரு காரியம் உள்ளது. என் இருதயத்தில் ஏதோ ஒரு காரியம் உள்ளது. நான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளும் வரையில் என்னால் அதைக் கூற முடியாது. நான் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். நான் தேவனைப் பற்றிக் கொண்டிருக்கிறேன். நான் வனாந்திரத்தின் பின்பகுதிக்கு திரும்பிச் செல்லப் போகிறேன். நான்—நான்—நான் மீண்டும் தேவனை சந்தித்தாக வேண்டும். ஏதோ ஒரு காரியம் உண்டு. நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்த பரிசுத்தமான இடத்திற்கு மீண்டுமாய் போய், நான் அவரிடத்தில் பேச விரும்புகிறேன். நான்—நான் இருமுறை அவரை தரிசனத்தில் கண்டேன். நான் பிரிந்து செல்வதற்கு முன்னே என்னால் அவரை மீண்டுமாய் காண முடியும் என்று நான் நம்புகிறேன். வேதவாக்கியங்களில் நான் கண்டறிந்த ஏதோ ஒன்று உண்டு. எனக்கு—எனக்கு—எனக்குத் தெரியாது. அது என் இருதயத்தில் இருந்து வருகிறது. அதைக் குறித்து நான் பேசுகிற ஒவ்வொரு முறையும் ஏதோக் காரியம் சம்பவிக்கிறது. நான்…நான்…நான்—நான் ஓர் இடத்திலே இருக்கிறேன், என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது எனக்குள்ள இந்த ஊழியம் மாறிக்கொண்டிருக்கிறது என்றும், மகத்தான ஏதோ ஒன்று அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளப் போகிறது என்பதையும் நான் விசுவாசிக்கிறேன். அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரம் என்னால் முடிந்தால், என்னுடையக் கர்த்தரோடு தொடர்புகொள்ள முடியுமா என்று பார்க்க நான் வனாந்திரத்தின் பின்பக்கத்திற்கு அந்தப் பரிசுத்தமான இடத்திற்குப் போகப் போகிறேன். நான் அவரைக் கண்டறியும் வரையில், இவை யாவும் என்ன என்பதைக் குறித்து நான் கண்டறியும் வரையில் என்னால் இளைப்பாற முடியாது, நான் சமாதானமாகவே இருக்க முடியாது. அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் இன்னும் என்னைப் புறக்கணித்துத் தள்ளவேயில்லை; அவர் இந்த முறை புறக்கணிப்பார் என்று நான் நம்பவில்லை. நான் பெருமையாகவே பேசிக்கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு உதவி செய்யும்படி நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். 103 எனக்கு—எனக்கு—எனக்கு அது தேவையில்லை என்பதனால் அல்ல. என்னே, என்னால் இங்கு திரும்பி வந்து பிரசங்கித்துவிட்டு, தொடர்ந்து சொல்ல முடியும். என்னை ஒருவிதமாகக் கவனமாகக் கண்காணித்து உதவிசெய்யும்படிக்கு எனக்கு போதிய நண்பர்கள் உள்ளனர் என்றே நான் யூகிக்கிறேன். அதுவல்ல. அது எண்ணமும் அல்ல. தேவன் என்னோடு இருப்பாரேயானால், நான் பெற்றுள்ள இந்த ஊழியத்தில் என்னால் தொடர்ந்து செல்ல முடியும். என்னால் தொடர்ந்து செல்ல முடியும். 104 ஆனால் என்னுடைய இருதயம் திருப்தியடைந்திருக்கவில்லை. ஏதோ ஓர் ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிட்டுக்கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று அசைவாடிக் கொண்டிருக்கிறது. நான் என்னுடையக் கரங்களை அதன்மேல் வைத்து, “கர்த்தாவே, அது எங்கே உள்ளது?” என்று கேட்க முடிந்தது போன்று காணப்படுகிறது. அது எனக்காக அல்ல. அது அவருடைய ஜனங்களுக்காகவேயாகும். அது தேவனுடைய பிள்ளைகளுக்காகவேயாகும். நான் வெறுமென ஒரு பலியாக மாறுகிறேன். 105 நான் ஒரு வயோதிக மனிதன். என்னுடைய நாட்கள் முடிவடைந்துவிட்டன. என்னுடைய வாலிப நாட்கள் கடந்துபோய்விட்டன. நாற்பத்தொன்பது வயதுடைய ஒரு மனிதன் இனி ஒருபோதும் குழந்தை அல்ல. நாம் அதை அறிவோம். இன்னும் ஒரு வருடத்தில் நான் ஐம்பது வயதுடையவனாயிருப்பேன். நான் ஒரு பையன் அல்ல. நான் வளர்க்க வேண்டிய பிள்ளைகளை உடையவனாயிருக்கிறேன். அது உண்மை. 106 ஆனால் சகோதரனே, எல்லாவற்றிற்கும் மேலாக நான் செய்ய வேண்டிய தேவனுடைய வேலை எனக்கு உண்டு. எனக்குள்ளாக ஏக்கங்கொண்டிருக்கிற இது என்னவென்பதைக் குறித்து நான் அறிந்துகொள்ள வேண்டும். நான் அதைக் கண்டறியும் வரையில் நான் போகத்தான் வேண்டும். நான் அவரை எங்காவது கண்டறிய வேண்டும். நான் அறிந்துகொள்ள வேண்டும். 107 நான் அதே அறிக்கையை இங்கே ஒருமுறை கூறினபோது, சுமார் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக்கூடாரத்தில் இங்கே ஏதோ ஒன்று இருந்தது என்று நான் யூகிக்கிறேன். அது இங்குள்ள எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? உயர்த்தப்பட்டுள்ள அந்த வயோதிகக் கரங்களைச் சற்று நோக்கிப் பாருங்கள். நான் “ஏதோ ஒன்று இங்கு உள்ளது” என்றும், என்னால் அதைக் குறித்து கிட்டத்தட்டப் பேச முடியும் என்றும், அது சமீபத்தில் உள்ளது என்றும் கூறினேன். உங்கள் எல்லோருக்கும் முன்பாக ஆற்றண்டையிலே இங்கு தூதனானவர், “முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டதுபோல, நீ உலகத்தைச் சுற்றிலும் ஒரு செய்தியை அனுப்புவாய்” என்று கூறினார் என்பதை நான் அறிந்திருந்தேன். அது சம்பவித்துள்ளது. உலகத்தைச் சுற்றிலும் ஒவ்வொரு தேசத்திலும் ருஷ்யாவிற்குள்ளும் கூட இப்பொழுது சுகமளிக்கு ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, ஆம் ஐயா. எங்கே அது மரித்துப் போயிருந்ததோ அங்கெல்லாம் சுகமளிக்கும் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 108 இப்பொழுது மகத்தான ஏதோ ஒன்று அசைவாடிக் கொண்டிருக்கிறது. அங்கே…ஒரு நான் முசுக்கட்டைச் செடிகளுளுடைய இலைகளின் ஓசையைக் கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் சென்று கொண்டேயிருக்கிறேன். எனக்காக ஜெபியுங்கள். 109 இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வெளிப்படுத்துதலின் காரணமாகவே நான் இந்த ஊழியத்தில் இருக்கிறேன். அவர் உயிரோடு இருப்பாரேயானால், அவர் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் காத்துக்கொள்ளுவார். இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அவரை உயிரோடு வைத்திருக்கிறது யார்? நித்திய வெளிச்சம் எரியும்படி காத்துக்கொண்டிருக்கிறது யார்? இப்பொழுதோ இது சாயாங்கால வேளையாய் உள்ளது. அவர் சிலுவையேற்றத்திற்கு முன்னர் செய்தது போன்று, அவர் செய்த ஏதோ ஒரு காரியத்தின் அவருடைய வெளிப்படுத்துதல் மூலம் அவர் தம்மை சீஷர்களுக்கு வெளிப்படுத்தினார். [சகோதரன் பிரான்ஹாம் தம்முடைய விரலை ஒருமுறை சுடக்கிடுகிறார்—ஆசி.] அது அவராயிருந்தது என்பதை அவர்கள் உடனடியாக அடையாளங் கண்டு கொண்டனர். இப்பொழுதும் அவர் அதையே செய்வார். 110 என்னுடைய மற்றக் கூட்டங்களில் எத்தனைபேர் இருந்திருக்கிறீர்கள்? கட்டிடம் முழுவதும் உள்ளவர்களிலிருந்து நாங்கள் உங்களுடைய கரங்களைக் காணட்டும். அது நூறு சதவீதமாய் இருக்கிறது என்றே நான் யூகிக்கிறேன். ஆகையால் நான் அதனூடாகச் செல்ல வேண்டியதாயிராது. என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 111 எத்தனை பேர் இன்றிரவு அவர் மீண்டும் காட்சியில் நடந்து வரும்படிக் காண வாஞ்சித்துக் கொண்டும், காத்துக் கொண்டுமிருக்கிறீர்கள்? நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்களா? உயிர்த்தெழுந்த இயேசுவையா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது அவர் உயிரோடிருக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாகவே… 112 அது என்னவாயிருந்தது? [யாரோ ஒருவர், “X” என்கிறார்.] சரி. நாம்…சற்று…நாம் ஒரே நேரத்தில் மிக அதிகமானோரை அழைக்க முடியாது. நாம் ஒருகால் நான்கு அல்லது ஐந்து பேரை அல்லது இன்னும் கொஞ்சம் பேரை ஒரே நேரத்தில் நிற்க வைக்க முடியும். சரி. 113 நாம் இப்பொழுது ஜெப அட்டைகளோடு துவங்கி, அவர்களை எழும்பி நிற்க வைக்கத் துவங்குவோம். நாம் எண் ஒன்றை எடுத்துக்கொள்வோம். அதை வைத்திருக்கிறது யார்? உங்களுடைய அட்டையைப் பாருங்கள், எண் ஒன்று, ஒன்றா? [யாரோ ஒருவர், “சகோதரன் பில் இதோ இங்கே” என்கிறார்—ஆசி.] ஓ, நான் வருந்துகிறேன். பெண்மணியே சரி. ஒன்று. எண் இரண்டு, எண் மூன்று. நீங்கள் எழும்ப முடியுமா? எண் மூன்றை வைத்திருக்கிறது யார்? எண் நான்கு, எண் ஐந்து, எண் ஆறு, ஆறு என்ற எண்ணை நான் காணவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. எண் ஆறு. எண் ஏழு. தயவு செய்து எண் ஏழு. சரி இங்கே. ஆகையால் எட்டு, எண் எட்டு. எண் ஒன்பது. சரி. ஐயா. எண் பத்து. பின்னால்…நாம் எத்தனை பேர் என்று பார்ப்போமாக…[“பத்து உள்ளது.”] சரி. நாம் அங்கிருந்தே துவங்குவோமாக. அதன்பின்னர் நாம் பார்க்க முடிந்தால், ஒருகால் நாம் இன்னும் சிலரை கூப்பிடுவோம். 114 இந்தக் கட்டிடத்தில் என்னை அறியாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? எனக்கு உங்களைத் தெரியாது. தேவன் உங்களைச் சுகப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். எனக்கு உங்களைத் தெரியாது என்பதை அறிந்த எல்லாருமே. சரி பயபக்தியாயிருங்கள். 115 இப்பொழுது நம்முடைய கர்த்தராகிய இயேசு, அவர் பூமியின் மேல் நடந்தபோது…அவர்கள் ஜனங்களை வரிசையாக நிற்க வைத்துக் கொண்டிருக்கையில்…நம்முடைய கர்த்தராகிய, அவர் பூமியின்மேல் நடந்தபோது, அவர் ஒருபோதும் ஒரு சுகமளிப்பவராக உரிமை கோரவேயில்லை. எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] அவர், “அது எனக்குள்ளே வாசமாயிருக்கிற என் பிதாவாயிருக்கிறது” என்றார். அவர், “நான் தாமாகவே ஒன்றையும் செய்ய முடியாது; ஆனால் பிதாவானவர் செய்ய நான் காண்கிறதெதுவோ, அதையே குமாரன் செய்கிறார்” என்று கூறினார் என்பதை எத்தனைபேர் அறிவீர்கள் [“ஆமென்”.] 116 இப்பொழுது, அவர் ஒரு மனிதனை…மனிதனைக் கண்டபோது…அவர் தம்மை யூத இனத்திற்கு முன்பாகப் பிரகடனம் செய்தார். அந்த மனிதன் எங்கே இருந்தான் என்றும், அவன் என்ன செய்துகொண்டிருந்தான் என்றும் அந்த மனிதனுக்கு கூறுவதன் மூலம் அவர் ஓர் அற்புதத்தை நிகழ்த்தினார். அப்பொழுது அவர்கள் அவரை விசுவாசித்தனர். 117 அவர் தம்மை சமாரிய இனத்திற்கு பிரகடனம் செய்தபோது, அவர் ஒரு ஸ்திரீயினுடைய இரகசியம் என்னவாயிருந்தது என்பதை அவளுக்கு கூறினார். அப்பொழுது அவள் அவரை விசுவாசித்தாள், முழு இனமும் விசுவாசித்தது; அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] 118 ஆனால் நினைவிருக்கட்டும், அவர் அதை புறஜாதியாருக்கு ஒருபோதும் செய்யவேயில்லை, ஒரு புறஜாதியானின் முன்னிலையில் ஒருபோதும் செய்யவேயில்லை. ஏனென்றால்…இதுவோ புறஜாதியாரின் யுகமாய் இருந்து வருகிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஆனால் இப்பொழுதோ சாயங்கால வெளிச்சமானது வந்துள்ளது. எந்தவிதமான ஒரு வெளிச்சம் பிரகாசித்தது? சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தபோது எந்தவிதமான ஒரு ஒளி பிரகாசித்தது? மேலே வந்தபோது பிரகாசித்த அதே சூரியன் கிழக்கில் பிரகாசித்தது. நீங்கள் அதை நம்புகிறீர்களா? [“ஆமென்”] அதே சூரியன் பூமியின் குறுக்கே சென்றதல்லவா? [“ஆமென்”] மூடுபனியாகவும், இருளாக இருந்த நாளில் உதயமாகி வெளிச்சத்தை தோன்றச் செய்தது அதே சூரியன் தானே? அதன் பின்னர் அந்தச் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர், அது மீண்டும் பிரகாசித்தது, அது முன்னர் அங்கே பிரகாசித்த அதே வெளிச்சமாய் இருக்க அங்கே யூதர்கள் மேல் பிரகாசித்தது, ஆனால் புறஜாதிகள் மேல் பிரகாசிக்கவில்லை. அதன்பின்பு அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதற்காக அதே வெளிச்சமானது புறஜாதிகள் மேல் பிரகாசிக்க வேண்டியதாயிருக்கிறது. அது சரிதானே? [“ஆமென்”] இப்பொழுது நீங்கள் விசுவாசியுங்கள். இப்பொழுது சகோதரி கெர்ட்டி, உண்மையாகவே சற்று நேரம் அமைதியாயிருங்கள். 119 இப்பொழுது இந்த ஜெப வரிசையில் உங்களில் அநேகரை எனக்குத் தெரியாது என்றே நான் யூகிக்கிறேன். உங்களோடுள்ள கோளாறு என்னவென்றும், அல்லது உங்களைக் குறித்தும் ஒன்றுமே எனக்குத் தெரியாது என்பதை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? நீங்கள் அதை அறிவீர்களா? ஜெப வரிசையில் உள்ள உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்திருக்கிற நீங்கள் உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள். 120 உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்தவர்கள் கூட்டத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? இப்பொழுது நீங்கள் இங்கே சுற்றிலும் இருக்கிறீர்களா என்று நான் கவலைப்படவில்லை, நான் உங்களைக் குறித்து ஒன்றையுமே அறியேன். சரி. சரி அப்படியே விசுவாசமாயிருங்கள். 121 இப்பொழுது, நம்முடையக் கர்த்தர் ஒருமுறை மரித்துப்போன ஒரு சிறு பெண்ணை உயிரோடெழுப்பப் போவதாயிருந்தார், அப்பொழுது ஒரு—ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவரோ திரும்பி, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே அப்படியே அமைதியாயிருந்தனர். அவரைத் தொட்டதைக் குறித்து அவர்கள் மறுத்தனர். ஆனால் அவரோ சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்தபோது… 122 அவர்களில் சிலர் அவரை கடிந்துகொண்டனர், பேதுருவோ, “ஆண்டவரே, உம்மைத் ‘தொட்டது’ யார் என்று எப்படி நீர் கூற முடியும், முழு கூட்டமும் உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறதே” என்று கூறினான். 123 அவர், “ஆனாலும் நான்—நான்…வல்லமை என்னிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது” என்றார். அது, “பெலனாயிருக்கிறது”. 124 அவர் யார் என்று கண்டறியும் வரை சுற்றும் முற்றும் பார்த்தார்…அந்த ஸ்திரீ யார் என்பதை அவர் எப்படி அறிந்து கொண்டார்? அது அவளுடைய சொந்த விசுவாசமாயிருந்தது; ஏனென்றால் அவர் அவ்வண்ணமாய்க் கூறியிருந்தார். “உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்திருக்கிறது. உனக்கு இருந்து வந்த உன்னுடைய உதிரப் போக்கு நின்றுபோயிற்று. உன்னுடைய விசுவாசம் உன்னைக் குண்மாக்கியிருக்கிறது”. 125 அதுவே இன்றைய இயேசு கிறிஸ்துவாயிருக்கிறது, அதுவோ நேற்றையதயிருந்தது, அவரால் இன்றைக்கும் அதேக் காரியத்தைச் செய்யக் கூடுமானால், அப்பொழுது அவர் தம்மைத்தாமே மாறாதவராய் நிரூபிக்கிறார். 126 இங்கே இந்த ஸ்திரீயை நான் அறிந்திருக்க வேண்டும் என்பது போன்று இது தென்படுகிறது. நீங்கள் தான் முதல் நபரா? நீங்கள்…நான் உங்களை அறிந்திருக்கலாம். எனக்கு உங்களைத் தெரியாது. உங்களுடைய முகமோ நன்கு தெரிந்தது போன்று காணப்படுகிறது. எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது என்னவாயிருந்தாலும், நீங்கள் எழும்பி இங்கே ஒரு நிமிடம் வாருங்கள். நான் உங்களை அறிந்திருக்கிறேனா…என்பதை நான் கூற விரும்புகிறேன். நான் அறியாதிருக்கலாம். எனக்கு உங்களுடையப் பெயரைத் தெரியாது. ஆனால் நான் உங்களை பார்த்திருப்பது போன்று தென்படுகிறது. நான் ஒருவேளை பார்த்திருக்கலாம். ஆனால் நீங்கள் இங்கு எதற்காக இருக்கிறீர்கள் என்பதை நான் அறியேன். நீங்கள் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு உங்களைத் தெரியும் என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது சற்று…நீங்கள், உங்களுடைய முகம் நன்கு தெரிந்தது போன்று காணப்படுகிறது. நான் உங்களை அறியாதிருப்பேனா? உங்களை—உங்களை, நான் உங்களை அறிந்திருக்க மாட்டேன். சரி, அப்பொழுது நீங்கள் ஓர் அந்நியராயிருக்கிறீர்கள். இவளுடைய முகம் எனக்கு நன்கு தெரிந்திருப்பது போன்று காணப்பட்டது. எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே நான் அதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருந்தது. 127 இப்பொழுது எல்லாருமே அறிந்திருக்கிறபடி நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருப்பீர்களேயானால் நலமாயிருக்கும், அதாவது இப்பொழுது ஏதோ ஒரு காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. ஓ, உங்களால்—உங்களால் உணர முடியவில்லையா…நீங்கள் அதை உணரக் கூடியவர்களாயிருக்கவில்லை, ஆனால் நீங்கள் அதை உணருங்கள். தேவனுடையத் தூதனானவர் இங்கே இந்த பீடத்தண்டை இப்பொழுது இருக்கிறார் என்பதை நான் அறிவேன். அங்கே உள்ள அந்தப் புகைப்படத்தில் உள்ள அந்த ஒளியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த ஒளி இப்பொழுது இங்கே உள்ளது. நீங்களோ, “நான் அதைக் காணவில்லை” என்று கூறலாம். 128 அவர்களோ, “அவர் இதை உங்களுக்குக் கலிலேயாவில் கூறினார்” என்று அவர்களுக்குக் கூறின அந்தத் தூதர்களை ஒருபோதும் பார்க்கவேயில்லை. ஆனால் அவர்கள் அங்கிருந்தனர். 129 அவர் இங்கிருக்கிறார். அவர் கிறிஸ்துவாய், உயிர்த்தெழுந்த ஒருவராய் இருக்கிறார். இன்றைக்கு கிறிஸ்துவானவர் ஓர் ஒளியின் ரூபத்தில் இருக்கிறார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாக, அவர் அவ்வண்ணமாய் இருக்கிறார் என்று வேதம் உரைத்துள்ளது. 130 இப்பொழுது நீங்கள் உண்மையாகவே பயபக்தியாயிருங்கள். சுற்றும் முற்றும் அசையாதீர்கள். நீங்கள் எங்கே—இருக்கிறீர்களோ அங்கேயே அப்படியே ஜெபியுங்கள். 131 இப்பொழுது நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருப்போமேயானால்,…தேவனாகியக் கர்த்தர், அவர்…நீங்கள் சுகவீனமாயிருந்தால், என்னால் உங்களை சுகப்படுத்தக் கூடுமானால், நான்—நான் அதைச் செய்வேன்; ஆனால் என்னால் சுகப்படுத்த முடியாது, ஏனென்றால் அது ஏற்கனவே செய்யப்பட்டாயிற்று. இயேசு கல்வாரியில் மரித்து, உயிர்த்தெழுந்தபோது, அவர் அதை செய்துவிட்டார். அவர் அதை நிரூபித்தார். இப்பொழுது நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்துவாரேயானால் நலமாயிருக்கும். 132 இப்பொழுது, அவர் இங்கே இதேவிதமான ஆடையை அணிந்து கொண்டு நின்றுகொண்டிருந்திருப்பாரேயானால், நீங்கள் யாராயிருந்தீர்கள் என்பதை அவர் அறிந்து கொண்டிருந்திருப்பார். தேவன் அதை அவருக்கு வெளிப்படுத்தியிருந்திருந்தால், அப்பொழுது அவர் அதை அறிந்து கொண்டிருந்திருப்பார். அவர், “பிதாவானவர் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குக் காண்பிக்கும் வரையில் நான் ஒன்றையுமே செய்கிறதில்லை” என்றார். அவர் இங்கே இருந்திருப்பாரேயானால், அப்பொழுது அவர் ஒருக்கால் நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்களுடைய பெயர் என்ன என்றும், நீங்கள் ஆராதனைக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்தீர்கள் என்றும், அல்லது உங்களுடைய இருதயத்தில் என்ன மனதிற்கொண்டிருந்தீர்கள் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்துவார். ஆனால் சுகமளித்தல், அது ஒரு முடிவு பெற்றக் கிரியையாயிருக்கிறது. இப்பொழுது, அவர் அதேக் காரியத்தைச் செய்வாரேயானால், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறதெதுவோ அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசிப்பீர்களா? 133 அவர் இந்த ஸ்திரீக்கு வெளிப்படுத்துவாரேயானால், கூட்டத்தாரே நீங்களும்கூட அதை விசுவாசிப்பீர்கள் என்று உங்களுடையக் கரத்தைத் தேவனுக்கு உயர்த்துவீர்களா? அவளே நியாதிபதியாய் இருக்கட்டும். [சபையோர், “ஆமென்” என்கிறார்கள். ஆசி.] 134 இப்பொழுது எவரேனும் வந்து இந்த ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். 135 இப்பொழுது இங்கேதான் நான் ஒரு பொய்யன் என்று கண்டறியப்படப்போகிறதாயும், தேவனுடைய வார்த்தை சத்தியமற்றது என்பதாயுமிருக்க வேண்டும் அல்லது நான் சொல்லிக் கொண்டிருக்கிற சத்தியமும், அவருடைய வார்த்தையும் உண்மையானதாய் இருக்க வேண்டும். சரி. அங்குதான் காரியம். அது வெறுமையாகத் திரும்ப முடியாது. இது அதனைத் தெளிவுபடுத்துகிறது. இது அதைச் செய்கிறது. 136 இப்பொழுது இந்த ஸ்திரீ சுகவீனமாயிருந்தால், நான் என்னுடையக் கரங்களை அவள் மீது வைத்து, “சகோதரியே, நீங்கள் சுகமடையப் போகிறீர்கள்” என்று கூறினால், அப்பொழுது அவள் என்னுடைய வார்த்தையை அதற்காக மட்டுமே ஏற்றுக்கொள்வாள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவளுடைய ஜீவியத்தில் முன்பிருந்தே இருந்து வருகிற ஏதோ ஒரு காரியத்தை வெளிப்படுத்துவாரேயானால், அப்பொழுது இது உண்மையா அல்லது இல்லையா என்பதை அவள் அறிந்துகொள்வாள். இருந்து வருகிறதான ஏதோ ஒரு காரியத்தை, அவர் அது என்னவாய் இருந்து வருகிறது என்பதை அறிந்திருப்பாரேயானால், அப்பொழுது அது என்னவாய் இருக்கும் என்பதையும் அவர் நிச்சயம் அறிந்துகொள்வார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 137 இப்பொழுது என் சகோதரியே, அவர் அதை உனக்கு அருளுவாராக. அப்பொழுது கூட்டத்தார் யாவரும் அதை விசுவாசிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். 138 நீங்களும் நானும் இந்த நேரத்தில் இங்கே அந்நியர்களாய் சந்திக்கிறோம். நீங்கள் அங்கே நின்று கொண்டிருக்கையில் ஏதோ காரியம் தவறாய் உள்ளது. அது என்னவென்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் உங்களை அறியேன், நீங்கள் என்னவாய் இருந்தீர்கள் என்றும், உங்களோடுள்ள கோளாறு என்னவென்றும் நான் எப்படி அறிந்து கொள்வேன்? ஆனால் உங்களோடுள்ள கோளாறு என்னவென்பதை தேவன் அறிந்திருக்கிறார். இப்பொழுது நீங்கள் அப்படியே உண்மையான பயபக்தியோடிருங்கள். 139 இப்பொழுது இந்தப் பெண்மணி துவக்கத்திலிருந்தே இங்கே அவளுக்காக இல்லை. நீங்கள் இங்கே யாரோ ஒருவருக்காக இருக்கிறீர்கள்; அது ஒரு சிறு குழந்தையாயிருக்கிறது. அது ஒரு தொல்லையை உடையதாயிருந்து கொண்டிருக்கிறது. அது உண்மையாகவே நரம்புத்தளர்ச்சியாயிருக்கிறது. அது ஒரு பேரனாய் இருக்கிறது, அது உங்களுடையப் பேரன் என்று நான் நம்புகிறேன். ஏதோ ஒரு காரியம் விநோதமாயிருக்கிறது. நான் அந்தக் குழந்தையை ஒரு பட்டிணத்தில் காண்கிறேன், அது இந்தப் பட்டிணம் அல்ல. அது நியூ ஆல்பனியைப் போன்று காணப்படுகிறது. அது உண்மை. அது ஒரு நரம்புக் கோளாறு நிலையை அடைந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு அதனுடைய ஈரலில் ஏதோ ஒரு கோளாறு உள்ளது. அவ்வண்ணமாகவே அவர்கள் கூறுகிறார்கள். அதிகமாகவே வாந்தியெடுத்தல் இருந்து வருகிறது. அது உண்மை. நீங்கள் அதைக் குறித்து கலக்கமடைந்திருக்கிறீர்கள். அந்த ஒன்றிற்காகவே நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். அது கர்த்தர் உரைக்கிறது என்பதாகும். 140 நீங்களே நியாயாதிபதியாயிருங்கள். அந்தக் காரியங்கள் உண்மையாயிருக்கின்றனவா? [அந்த சகோதரி, “ஆமென்” என்கிறாள்.—ஆசி.] நான் உங்களுக்கு என்ன கூறியிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒலிநாடாவிலோ அது பதிவாக்கப்பட்டுள்ளது. அது கூறுகிறது. அதுவே எனக்கும் கூறும். இப்பொழுது இது ஏதோ ஒரு வழியில் யாரோ ஒருவருக்கானதாய் இருந்தது. அந்த அபிஷேகம் உங்கள் மேல் இருந்தபோது நீங்கள் உங்களுடையக் கரத்தில் வைத்திருந்த அந்தக் கைக்குட்டையைச் சந்தேகப்படாமல் அந்த ஒருவரின் மீது வையுங்கள், அப்பொழுது நீங்கள் கேட்டுக்கொள்வதை பெற்றுக்கொள்வீர்கள். அது என்னவாயிருந்தது என்பதை அவர் அறிந்திருப்பாரேயானால், அது என்னவாய் இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருப்பார். சந்தேகப்படாதீர்கள். போய் விசுவாசியுங்கள். 141 ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? [அந்த சகோதரன், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்கிறார்.—ஆசி] நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். [“முற்றிலுமாக.”] நாம் அந்நியர்களாயிருக்கிறோம். [“இந்தக் காலை வரையில், இதற்கு முன்பு என்னுடைய வாழ்கையில் ஒருபோதும் உங்களைக் கண்டதேயில்லை”.] 142 இந்தக் காலை வரையில், இதற்கு முன்பு அவர் தன்னுடைய ஜீவியத்தில் என்னை ஒருபோது கண்டதேயில்லை என்றுக் கூறினார். இப்பொழுது, உண்மையாகவே ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது அபிஷேகமானது ஏற்கனவே வந்திறங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் பாருங்கள். நான் இதை விளக்கிக் கூற முடிந்தால் நலமாயிருக்கும். 143 ஆனால் ஐயா தேவன் உங்களை அறிந்திருக்கிறார். உங்களுடையத் தொல்லை என்னவென்பதை தேவனாகிய கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அப்பொழுது நீங்கள் அவரை உங்களுடையச் சுகமளிப்பவராக அல்லது இரட்சகராக, உங்கள் தேவை என்னவானாலும் அவரை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? [அந்த சகோதரன், “நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன்” என்கிறார்.—ஆசி.] இப்பொழுது தரிசனம் தோன்றும்போது, நீங்கள் அதற்கு செவிகொடுக்கிறீர்கள். [“ஆமென்”.] 144 நீங்கள் தரையில் குறுக்காக நகர முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுடைய முழங்காலில் உள்ள ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. அது உங்களுடைய முழங்காலில் உள்ள மூட்டு வீக்கமாய் உள்ளது. உங்களுக்கு உங்களுடையக் கண்களிலும் கூடத் தொல்லை உள்ளது. அவைகள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. [அந்த சகோதரன், “அது உண்மை” என்கிறார்.—ஆசி.] உங்களுடைய காதிலும் உங்களுக்குத் தொல்லை உண்டு. [“அது உண்மை”.] உங்களுடைய வயிற்றிலும் உங்களுக்குத் தொல்லை உண்டு. [“ஐயா, அது உண்மை.”] அது உண்மையாயிருக்கிறது. [“முற்றிலுமாக, அப்படியே நான் அதைக் கூறியிருந்திருக்க வேண்டிய உண்மையைப் போன்று இருக்கிறது”.] நீங்கள் இந்தப் பட்டிணத்திலிருந்து வரவில்லை. நீங்கள் கென்டக்கியில் உள்ள சம்மர்செட் என்ற இடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். [“அது உண்மை”.] உங்களுடையப் பெயர் திரு.ஹட்சன் [“அது உண்மை”.] இப்பொழுது நீங்கள் திரும்பிப்போய் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், நீங்கள் சுகமடைவீர்கள். உங்களுடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசியுங்கள். 145 நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] தேவனில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். ஆனால் அப்படியே விசுவாசியுங்கள். 146 சகோதரியே, தேவனாகிய கர்த்தர் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் இங்கு எதற்காக இருக்கிறீர்கள் என்பதை அவரால் எனக்கு வெளிப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “நான் விசுவாசிக்கிறேன். நான் அதை அறிந்திருக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] அவர் அதைச் செய்வாரானால், அப்பொழுது நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? [“ஆமென்”.] [சகோதரன் பிரான்ஹாம் பேசுவதை இடையே சற்று நிறுத்திவிட்டு சபையோரை நேராகப் பார்க்கிறார்—ஆசி.] 147 இந்தப் பெரிய உருவங்கொண்ட நபர் இங்கே அமர்ந்திருக்கிறார், ஆம், ஐயா, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். [அந்த சகோதரன், “ஆம், ஐயா” என்கிறார்.—ஆசி.] ஆனால் சற்று நேரத்திற்கு முன்னர் நான் அந்த மனிதனிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு காரியம் உங்களுக்குச் சம்பவித்தது. அப்பொழுது நீங்கள் உங்களுடைய இருதயத்தில், “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறினீர். அது உண்மை, அப்படியில்லையா? [“ஆமென்”.] நீங்கள் எதிலிருந்து சுகமாக்கப்பட வேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? [“ஆம்”.] உங்களை ஒருவிதமான இருமல் தொல்லைப்படுத்துகிறதை நீங்கள் உடையவராயிருக்கிறீர்கள். அது உண்மை. உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். சரி. நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால், நீங்கள் அதை இனி ஒருபோதும் உடையவராயிருக்கமாட்டீர்கள். அது உங்களிடத்திலிருந்தேப் போய்விடும். இதை விசுவாசியுங்கள். 148 அவர் எதைத் தொட்டார்? அவர் என்ன செய்தார்? அவர் பிரதான ஆசாரியரைத் தொட்டார், என்னையல்ல. அது…முடியும்…நான் அந்த மனிதனை ஒருபோதும் கண்டதேயில்லை. எனக்கு அவரைக் குறித்து ஒன்றுமேத் தெரியாது. 149 அது உயிர்த்தெழுந்த இயேசு என்று நீங்கள் விசுவாசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அவர் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் மாறாத அதே ஒருவர் என்பதை நிரூபிக்க அவர் செய்த அதேக் காரியமாய் இது இருக்கவில்லையா? சிலர், “எந்தவிதமான ஓர் ஆவியாய் அது இருக்கிறது?” என்று கேட்கிறார்கள். ஒரு ஆவியானது எப்பொழுதுமே அதனைக் குறித்தே சாட்சிப் பகரும். அந்த…நாம் கொடிகளாயிருக்கிறோம்; அவர் திராட்சைச் செடியாயிருக்கிறார். ஒரு பூசணிக்கொடி பூசணிக்காய்களைக் கொடுக்கும்; ஒரு திராட்சைக்கொடி திராட்சைப் பழங்களைக் கொடுக்கும்; ஆப்பிள் மரம் ஆப்பிள்களைக் கொடுக்கும். ஒரு கிறிஸ்தவ ஜீவியம் கிறிஸ்துவைப் பிறப்பிக்கும். அது விநோதமான காரியம் அல்ல. 150 உங்களுடையக் கண்கள் மோசமாகிக்கொண்டேப் போகின்றன. உங்களுடையக் கண்ணுக்காக உங்களுக்கு ஜெபம் தேவை. அது உண்மை, அப்படியில்லையா? அது உண்மை. உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள், எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் தேவன் அறிந்திருக்கிறார். ஆனால் உங்களுடைய ஜீவியத்தை நீங்கள் மறைக்க முடியவில்லை. 151 இதோ நான் ஏதோ ஒரு காரியத்தை, ஒரு மருத்துவமனையைக் காண்கிறேன். இப்பொழுது அப்படியே சற்று நேரம் இருங்கள். அது ஒரு கண் பரிசோதனை அல்ல. அதுவல்ல. அது ஓர் அறுவைச்சிகிச்சை. அது உங்களுக்கு அல்ல. அது அறுவைச்சிகிச்சை செய்துள்ள உங்களுடைய ஒரு நண்பனாய் உள்ளது. அது ஏதோ ஒன்று அல்ல, ஒரு குடற்சரிவு அறுவை சிகிச்சையாகும். நீங்கள் அதைக் குறித்து பயமடைந்திருக்கிறீர்கள், ஏனென்றால் அது ஒரு குடற்சரிவிலிருந்து வித்தியாசமான வேறேதோ ஒன்றாய் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது உண்மை. அது இந்தியானாவில் உள்ள காரிடானில் நடந்தது. அது உண்மை. நீங்கள் இப்பொழுது உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? [ஒரு சகோதரி, “நிச்சயமாக விசுவாசிக்கிறேன்” என்கிறாள்.—ஆசி.] போய், நீங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்ளுங்கள். [“உங்களுக்கு நன்றி.”] கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில். 152 நான் உங்களுடைய முகத்தை அறிந்திருக்கிறேன். நான் அறிந்திருக்கவில்லையென்றால்…உண்மையாகவே இது அபிஷேகமாயிருக்கிறது. பாருங்கள். ஆனால் எனக்கு நன்கு நினைவிருக்கிறபடி, நீங்கள் ஒரு பிரசங்கியல்லவா? பாருங்கள், சபையோர் அது…ஒன்றுமில்லை…என்று காணும்படி நான் தெரிந்திருக்க விரும்பினேன். அது ஏதோ ஒரு காரியமாய் இருக்கிறது, நான் எவரையேனும் அறிந்திருந்தால், எனக்கு—எனக்கு அவர்களைத் தெரியும். ஆனால் நீங்கள் இங்கு எதற்காக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பிளாக்கிஸ்டன் மில் அல்லது அங்கு எங்கிருந்தோ வந்துள்ள ஒரு பிரசங்கியராய் நீர் இருக்கிறீர் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் நீர் என்னுடைய வீட்டிற்கு ஒரு முறை குழந்தைக்காக ஜெபிக்கவோ அல்லது ஏதோ ஒரு காரியத்திற்காக வந்திருக்கிறீர் என்று நான் நினைக்கிறேன்…ஆம். அது ஏதோ ஒரு குழந்தையைக் குறித்தாயிருந்தது என்பதை அறிவேன். ஆம். 153 ஆனால் உங்களுடையக் குடல்களில் உள்ள ஒருவிதமான கோளாறினால் நீங்கள் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நான் அதை உங்களுக்குக் கூறட்டும், அப்பொழுது நான் தேவனுடைய ஊழியக்காரனா அல்லது இல்லையா என்பதை நீங்க அறிவீர்கள். நீங்கள் உங்களுடைய இருதயத்தில் யாரோ ஒருவருக்காக ஜெபிக்க நினைத்திருக்கிறீர்கள், அது ஒரு முடமான சிறு பெண்ணாயிருக்கிறது. அவள் இங்கு இல்லை. அவள் ஆற்றிற்கு பக்கத்தில் இருக்கிறாள். அவள் கென்டக்கியில் இருக்கிறாள். இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் கேட்கிறதைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆமென். 154 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களால் விசுவாசிக்க முடியுமானால், உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். சந்தேகப்படாதீர்கள். பின்னால் உள்ள கூட்டத்தாரைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசித்துக்கொண்டிருக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர். சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைச் சற்று நிறுத்துகிறார்—ஆசி.] 155 அங்கே பின்னால் ஒரு கறுப்புநிறப் பெண்மணி ஸ்திரீகளுக்கான உடல்நலக் கோளாறினைக் கொண்டவளாய் இடப்பக்கத்தில், இடப்புறமாக அமர்ந்திருக்கிறாள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தால், பெண்மணியே நீங்கள் உங்களுடையச் சுகமளித்தலைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது உண்மை. ஒரு மனிதனுக்குப் பக்கத்தில் கம்பத்தின் அருகே ஒரு கறுப்பு நிறப் பெண்மணி அமர்ந்திருக்கிறாள். இப்பொழுது அவள் தன்னுடையக் கையை உயர்த்தியிருக்கிறாள். உங்களுக்கு ஸ்திரீகளுக்கான கோளாறு உள்ளது. சரி. சகோதரியே, தேவனாகிய கர்த்தர் உங்களை குணமாக்கிவிட்டார். உங்களுடைய விசுவாசம் உங்களைக் குணமாக்கிவிட்டது. 156 அங்குள்ள அந்த ஸ்திரீயின் மீது ஒளியானது தொங்கிக்கொண்டிருக்கிறதை உங்களால் காணமுடியவில்லையா? அங்கே நோக்கிப் பாருங்கள். 157 ஓ, எவ்வளவு அற்புதமானது! தேவனாகிய கர்த்தர் ஒருபோதும் தவறுகிறதில்லை. பயபக்தியாயிருங்கள். ஓ, அவர் ஜீவிக்கிறார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் என்னுடைய இருதயத்தில் ஜீவிக்கிறார். 158 [ஒரு சகோதரி ஆசீர்வதிக்கப்பட்டு சத்தமிடத் துவங்குகிறாள்—ஆசி.] “நீ விசுவாசிக்கக் கூடுமானால், யாவும் கைக்கூடும்”. 159 நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். எனக்கு உங்களைத் தெரியாது. நான் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். நான் எப்போதாவது உங்களை பார்த்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இங்கே எதற்காக நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அப்பொழுது அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார் என்று விசுவாசித்து, என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? நாம் அந்நியர்களாய் இருப்போமேயானால், அப்பொழுது நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்பதை ஏதோ ஒருவிதமான வல்லமை அதை எனக்கு வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் இங்கே நாளப்புடைப்புச் சார்ந்த இரத்தக் குழாயினிமித்தமான கோளாறுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. 160 இப்பொழுது நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று கண்டறியும்படி வேறுயாருக்காவது ஜெபியுங்கள். வேறு யாராவது ஒருவருக்காக ஜெபியுங்கள், அவரால் அதை வெளிப்படுத்த முடிகிறதா என்று பார்ப்போம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 161 அவள் நரம்புத்தளர்ச்சியுற்றவளாயிருக்கிறாள். அவளுக்கு ஒரு சிறுநீர்ப்பெருக்கக் கோளாறு உள்ளது. அவள் காரிடானில் வசிக்கிறாள். அது உண்மை, அது சரிதானே? அப்படியானால் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுதே நீங்கள் போய், நீங்கள் கேட்டுக்கொண்டுள்ளதைப் பெற்றுக் கொள்ளுங்கள். 162 நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். அதை விசுவாசிக்கும்படி நான் உங்களுடைய விசுவாசத்திற்கு சவாலிடுகிறேன். இந்தக் கட்டிடத்தில் எங்கிருந்தாலும், நீங்கள் எங்கிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அப்படியே அதை விசுவாசியுங்கள். 163 அங்கே பின்னாகத் தூரத்தில், அங்கே அந்த வாலிப மனிதன் பின்னால் நின்றுகொண்டு போர்ட் வேயின் என்ற இடத்தில் குருடனாயிருக்கிறத் தன்னுடைய நண்பனுக்காக ஜெபிக்கிறான். தேவன் அவரை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “ஆமென்” என்கிறார்.—ஆசி.] சரி, அப்படியானால் உங்களால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். 164 அங்கே பின்னாக இருக்கும் மீதமுள்ள சிலராகிய நீங்கள் விசுவாசியுங்கள். சவாலிடுகிறேன், சவாலிடுகிறேன்…தேவன் இரக்கமுள்ளவராயிருப்பாராக. 165 அங்கே அந்தக் கறுப்பு நிறப் பெண்மணி ஒரு கட்டியோடு சரியாக உங்களுக்குக் கீழே அமர்ந்திருக்கிறாள். பெண்மணியே, கர்த்தர் உங்களைக் குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசியுங்கள்; சரியாகப் பின் இருக்கையில், அங்கே பின்னால் உள்ள அதே பின் இருக்கையில் வட்டமான தொப்பி அணிந்து, தன்னுடையக் கரத்தை உயர்த்தியிருக்கிறாள். அந்தக் கட்டியிலிருந்து தேவன் உங்களை குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களேயானால், உங்களுடையக் கரத்தை உயர்த்தி, அதை அவருக்கு அசைத்துக் காண்பியுங்கள். சரி. அப்படியானால் வீட்டிற்குப் போய் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஓ, அவர் ஆச்சரியமானவராயிருக்கிறாரே! 166 இதோ ஒரு பெண்மணி இங்கே அவளுக்கு முன்பாக சரியாக அமர்ந்திருக்கிறாள், சற்றுப் பின்னால், உட்புறமாக அமர்ந்திருக்கிறாள், அவள் யாரோ ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள், அவளுக்கு அருகில் கர்த்தருடையத் தூதன் நின்றுகொண்டிருக்கிறார். அது அவளுடைய சிநேகிதி, அதற்காக ஜெபிக்கிறாள்…அவள் அதற்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாள், அவள் இங்கு வசிக்கவில்லை. அது ஏராளமான தேவதாரு மரங்கள் சுற்றிலும் உள்ள ஒரு சிறு பட்டினமாய் உள்ளது. அது இந்தியானாவில் உள்ள ஹென்றிவில் என்ற இடமாகும். [அந்த சகோதரி, “சரி” என்கிறாள்.—ஆசி.] அவள் இருதயக் கோளாறு உடையவளாயிருக்கிற அவளுடைய மைத்துனிக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். உங்களால் இதை விசுவாசிக்க முடியுமா? [“ஆமென்.”] அங்கே பின்னால் அமர்ந்துள்ள உங்களால் அதை விசுவாசிக்க முடியுமானால், தேவனில் விசுவாசங்கொண்டிருந்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். சரி. 167 சரி பெண்மணியே, நீங்கள் எனக்கு ஓர் அந்நியராய் இருக்கிறீர்கள். எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். பெண்மணியே, நீங்கள் அதை விசுவாசித்தால், உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். அங்கே அந்தப் பெண்மணி மூக்குக் கண்ணாடி அணிந்தவளாய் இருக்கிறாள். சரி, அதுதான் அது. 168 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] “நம்முடையத் தேவனாகிய கர்த்தர், அவர் தேவனாயிருக்கிறார்”. அவர் மரித்துப்போய்விடவில்லை. அவர் மரித்துவிட்டிருக்கவில்லை, ஆனால் அவர் உயிரோடிருக்கிறார். அவர் உயிரோடிருக்கிறார் என்பது மாத்திரமல்ல, அவர் இங்குப் பிரசன்னமாயிருக்கிறார். இது…[யாரோ ஒருவர், “ஆம்” என்கிறார்.—ஆசி.] 169 நான் நினைக்கிறேன், நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோமா? இதுவே நம்முடைய முதல் முறையான சந்திப்பாயிருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஆனால் தேவன் நம்மிருவரையுமே அறிந்திருக்கிறார். நீங்கள் எதைக் குறித்து மிகுந்த பயமடைந்திருக்கிறீர்கள்? முகர்தல் மற்றும் நறுமணத் தைலம் போன்றவற்றைக் குறித்து சிந்திப்பதை விட்டுவிடுங்கள். அதிலிருந்து விலகிச் செல்லுங்கள். தேவனை விசுவாசியுங்கள். அதை உங்களுடைய சிந்தையில் கொண்டிருங்கள். நீங்கள் இதை விசுவாசிப்பீர்களேயானால், நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்று சுகமடையுங்கள். 170 நீங்கள் ஏதோ ஒர் தொல்லை உடையவராக இருந்து வருகிறீர்கள். நீங்கள் உள்ளே வருகிறதையும், மருத்துவமனையிலிருந்து வெளியே செல்லுகிறதையும் நான் காண்கிறேன்; ஒன்று, இரண்டு, மூன்று முறைகள் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அது பெருங்குடலுக்கானதாய் இருந்து வருகிறது. அது பெருங்குடலில் உள்ள கட்டிகள் போன்று உள்ளது. நீங்கள் இந்தப் பட்டிணத்திலிருந்து வரவில்லை. நீர் ஒரு கென்டக்கியன். நான் இருந்து வருகிற கேம்பஸ்வில்லில் உள்ள ஒரு பட்டிணத்தில் இருந்து நீர் வந்திருக்கிறீர். [அந்த சகோதரி, “அது உண்மை” என்கிறாள்.—ஆசி.] திருமதி.வாகன் அவர்களே, நீங்கள் திரும்பிச் சென்று, அதை விசுவாசியுங்கள். நீங்கள் கேட்கிறதைப் பெற்றுக் கொள்ள முடியும். 171 நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 172 உங்களுடைய வயிற்றுக்கோளாறு முற்றுபெற்று, நீங்கள் சென்று உங்களுடைய இரவு ஆகாரத்தைப் புசிக்க விரும்புகிறீர்களா? சரி, போய் சாப்பிடுங்கள். நீங்கள் தேவனில் விசுவாசமாயிருங்கள். 173 நீங்கள் அந்த மூட்டுவீக்கம் முற்றுபெற்று, சுகமடைய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்களுடையச் சாலையில் அதை விசுவாசித்துக்கொண்டே செல்லுங்கள். 174 தேவன் அந்த இருதயக் கோளாறைக் குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [ஒரு சகோதரன், “நிச்சயமாகவே” என்கிறார். ஆசி.] உங்களுடைய சாலை வழியே செல்லுங்கள். நீங்கள் அதை விசுவாசியுங்கள். 175 இந்த மனிதன் இங்கே கடைசியில் ஒரு வெள்ளைச் சட்டை அணிந்து சரியாகப் பின்னால் அமர்ந்திருக்கிறார். இல்லை, அது சகோதரன் பங்க் என்பவாராயுள்ளது. அது அவருக்குப் பின்னே இருப்பதாகும். உங்களுக்குப் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை, இல்லையா? சரி. நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். 176 இங்கே மூட்டு வீக்கத்தோடு அமர்ந்துகொண்டு, என்னையே நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்துள்ளப் பெண்மணியே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஓஹையோவில் உள்ள மிடில்டவுனிலிருந்து வருகிறீர். நீங்கள் இதை விசுவாசிக்க விரும்புகிறீர்களா? அது ஒரு கிறிஸ்தவனாகக் கூட இல்லாத ஒரு நபருக்கான நல்ல விசுவாசமாய் உள்ளது. நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று அறிக்கையிடுகிறதில்லை. அது உண்மை. நீங்கள் இப்பொழுதே அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவீர்களா? நீங்கள் உயிர்த்தெழுந்த ஆண்டவரை, உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவரை விசுவாசிப்பீர்களா? நான் உங்களை அறியேன். நான் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. அது உண்மை. ஆனால் இப்பொழுதே உங்களுடைய இருதயத்தில் அவரை உங்களுடைய உயிர்த்தெழுந்த ஆண்டவராக ஏற்றுக்கொள்வீர்களேயானால், அப்பொழுது உங்களுடையப் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவன் உங்களை குணமாக்குவார். உங்களுடையக் கரத்தை அவருக்கு உயர்த்தி, அவரை விசுவாசியுங்கள். சரி. உங்களுடைய வீதியிலே களிகூர்ந்துகொண்டே செல்லுங்கள். நான் உங்களுடைய விசுவாசத்திற்குச் சவாலிடுகிறேன். நீங்கள் இதை விசுவாசிக்கும்படிக்கு நான் உங்களுக்கு சவாலிடுகிறேன். 177 நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம்; ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். [ஒரு சகோதரன், “நான் உங்களை அறிவேன், ஆனால் நீங்கள் என்னை அறியீர்கள்” என்கிறார்.—ஆசி.] உங்களுக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு உங்களைத் தெரியாது. அது தானே? நீங்கள் இங்கே எதற்காக இருக்கிறீர்கள் என்று தேவனால் எனக்கு வெளிப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்.”] 178 சரி, எத்தனைப் பேர் அதை விசுவாசிப்பீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 179 ஓ, எப்படி உங்களால் அவிசுவாசிக்க முடியும்? தேவனால் முடியாதா…தேவன் எப்போதாவது உங்களுடையக் கண்களைத் திறந்திருக்கிறாரா? இங்குள்ள அநேக ஜனங்களாகிய நீங்கள் என்னை அறிவீர்கள். நான் இங்கேயே பிறந்து வளர்ந்து வந்தவன். எப்படி என்னால்…முடியும்…என்னுடைய ஜீவியத்தினூடாகத் திரும்பிப் போய், எப்போதுமே கூறப்பட்டதான எந்தக் காரியமும் எப்போதும் உண்மையாயிருக்கும்படி பரிபூரணமாய் நிறைவேறியிருக்கிறதா என்று கண்டறியுங்கள். அதை ஆராய்ந்து, அது சரியாயுள்ளதா என்றுப் பாருங்கள். 180 நல்லது, நான் உங்களுக்கு என்னக் கூறிக் கொண்டிருக்கிறேன்? இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார். அவர் உயிரோடிருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார். இது ஈஸ்டராய் உள்ளது. இது இரண்டாயிரம் ஆண்டுகளாகவே ஈஸ்டராக இருந்து வருகிறது. ஆனால் இப்பொழுதோ சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. அப்பொழுது கிழக்கில் பிரகாசித்த அது இப்பொழுது மேற்கிலிருந்து பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. 181 ஐயா, இது பல மணிநேரங்களாகப் பிரசங்கிக்கக்கூடும். நான் அவரை அறிவேன் என்று ஒரு மனிதன் கூறினால்…அவர் அநேகமாக என்னை ஒரு கூட்டத்தில் எங்காவது அல்லது ஏதோ ஒரு இடத்தில் பார்த்திருப்பார். எனக்குத் தெரியாது. தேவன் அறிந்திருக்கிறார். எனக்குத் தெரியாது. நான் அவரை பார்த்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. நான் அவரை எப்போதாவது பார்த்திருக்கிறேனா என்றும் தெரியாது. ஆனால் அவர் என்னை பார்த்திருந்ததாக அவரே கூறினார். அவர் அறிந்திருக்கிற ஏதோ ஒரு காரியத்தை தேவன் அந்த மனிதனுக்கு வெளிப்படுத்துவாரேயானால், அப்பொழுது பிலிப்பு சென்று நாத்தான்வேலை அவரிடத்தில் அழைத்துக்கொண்டு வந்ததுபோல, எத்தனை பேர், “அது எனக்கு என்றென்றைக்குமாய் இதனை தீர்த்துவைக்கும்” என்று கூறுவீர்கள்? 182 நீங்கள் என்னை அறியாமலிருப்பீர்களேயானால், உங்களுடையக் கரத்தை அப்படியே உயர்த்துவீர்களா? எனக்கு உங்களைத் தெரியாது என்றும், உங்களைக் குறித்து ஒன்றுமே தெரியாதென்றால், அப்பொழுது உங்களுடையக் கரத்தை அப்படியே உயர்த்துங்கள். எனக்குத் தெரிந்தமட்டில் நான் உங்களைக் குறித்து ஒன்றையுமே அறியேன், உங்களை என் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டதேயில்லை. 183 இப்பொழுது தேவன் இதை அருளுவானால், எத்தனைபேர், “நான் அவரை இப்பொழுதே உயிர்த்தெழுந்த ஆண்டவராக, என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்வேன்” என்று கூறுவீர்கள்? 184 ஐயா, உங்களைச் சுகப்படுத்த என்னால் முடியாது. எனக்கு சுகமளிக்க வல்லமையேக் கிடையாது. என்னிடத்தில் இருக்கிற ஒரே ஒரு காரியம் தேவன் என்னை செய்யும்படி அனுமதிக்கிற ஒரே ஒரு வரம் மாத்திரமே என்னிடத்தில் உண்டு. 185 இப்பொழுது களைப்புற்று, பலவீனமடைந்துள்ளேன், இந்தத் தரிசனங்கள் கிட்டத்தட்ட என்னைக் கொல்லுகின்றன. இது பிரசங்கிப்பதைக் காட்டிலும் அல்லது குளத்தில் நிற்பதைக் காட்டிலும் மிக மோசமான நிலையாயும், கடினமானதாயுமுள்ளது. அது கடினமானதாயுள்ளது. ஆனால் தேவன் நல்லவராக இருக்கிறார். 186 நீங்கள் முதுகெலும்பினுடைய ஏதோ ஒரு கோளாறினால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அது ஒரு வளர்ச்சியாயுள்ளது, அவர்களோ அது உங்களுடைய முதுகெலும்பின்மேல் என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் சரியே, இப்பொழுது நீங்கள் விசுவாசிப்பீர்களா? 187 இப்பொழுது பாருங்கள், நான் அந்த மனிதனிடத்தில் அதிகமாகப் பேசினால், அதிகமானவைக் கூறப்படும். இப்பொழுது அப்படியே பயபக்தியாயிருக்கும்படி நான் உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பயபக்தியாயிருங்கள். நீங்கள் யாரோ ஒருவருக்காக ஜெபியுக்கிறீர்கள், கர்த்தர் அதை வெளிப்படுத்துவாரா என்று பாருங்கள். உங்களில் எவருக்கேனும் அதேக் காரியத்தைச் செய்யும்படிக்கு நான் வேண்டிக்கொள்வேன், அப்படியே உங்களுடையச் சிந்தனையில் அதை நினைவில் கொண்டிருங்கள். 188 ஏன், பாருங்கள், எனக்குள் ஒன்றுமே இல்லை. என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. நான் ஒரு மனிதன். 189 ஆனால் இயேசு தேவனாயிருக்கிறார், அவர் இங்கு பிரசன்னராயிருக்கிறார். உங்களால்…முடியவில்லையா…அதைக் காண்பதற்கு உங்களுடையக் கண்கள் திறக்கப்பட்டிருக்கிறதா? ஒரு கடந்தகால ஜீவியத்தைக் காணும்படியாக நீங்கள் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களல்லவா? இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர் இங்கே இருந்து வருகிறார்; அவர் உங்களிடத்தில் வார்த்தையின் மூலமாகப் பேசியிருக்கிறார்; அவர் உங்களிடத்தில் பிரசங்கத்தில் தொடர்ந்து பேசியிருக்கிறார். இப்பொழுது அவர் இங்கே தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 190 நான் என்னுடைய இருதயத்தில் உங்களைக் கவனமாக நினைவில் கொண்டிருக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். [அந்த சகோதரன், “என்னுடைய முதுகு எனக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறது” என்கிறார்.—ஆசி.] ஆம், நீங்கள் பரிசோதிக்கப்படுவதை நான் காண்கிறேன். அது உங்களுடைய முதுகெலும்பில் உள்ளது. அது ஒரு வளர்ச்சியாயிருக்கிறது. நீங்கள் உங்களுடைய மனைவிக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனைவியோடுள்ள கோளாறு என்னவென்பதை தேவன் எனக்கு காண்பிப்பாரேயானால், நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக விசுவாசிப்பீர்களா? அது அவளுடைய காதுகளில் உள்ளது. [“அது உண்மை.”] அது மாத்திரமல்ல, ஆனால் நான் ஒரு வாலிப மனிதன் தோன்றுவதைக் காண்கிறேன். அது உங்களுடைய மகன். உங்களுடைய மகனோடுள்ள காரியம் என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரேயானால், நீர் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பீரா? கூட்டத்தாரே அதை விசுவாசிப்பீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பையன், இதோ, அது ஒரு நரம்புத்தளர்வு நிலையும், ஒரு தோல் சம்மந்தமான வியாதியின் நிலையுமாயிருக்கிறது. அது முற்றிலும் உண்மை. அது கர்த்தர் உரைக்கிறதாவதாயிருக்கிறது. நீர் கேட்கிறதைப் பெற்றுக்கொள்வீர் என்று நீர் விசுவாசிக்கிறீரா? [“ஆமென்.”] அப்படியானால் உங்களுடைய வீதியிலே களிகூர்ந்துகொண்டே செல்லுங்கள். 191 எத்தனைபேர் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 192 இப்பொழுது நீங்கள் எனக்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படியே ஒரு நிமிடம், உங்களுடையக் கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். அப்படியே நீங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறீர்களோ அங்கேயே உங்களுடையக் கரத்தை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். 193 என்னே ஒரு நேரம்! நண்பர்களே உங்களால் காணமுடியவில்லையா? இது நானாக இருக்க முடியாது என்று உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? 194 ஆம், இந்தப் பெண்மணி அங்கே மூக்குக்கண்ணாடி அணிந்தவளாய், ஸ்திரீகளுக்கான கோளாறோடும், அந்தக் கசிவோடும் இருந்துகொண்டிருக்கிறார். அங்கு அமர்ந்துள்ளவரே அதைக் குறித்து இனி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். அது முற்றுப்பெற்றுவிட்டது. அது வெளிச்சமாக மாறுகிறது. அது உங்களிடத்திலிருந்து போய்விட்டது. 195 ஏதோ ஒன்று பிரசன்னமாயுள்ளது; அது இயற்கைக்கு மேம்பட்ட ஒரு காரியமாய், உண்மையான ஏதோ ஒன்றாய் உள்ளது. அவர் உங்களுடையப் பாவங்களை அறிந்திருக்கிறார். அவர் உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் கர்த்தராகிய இயேசுவாயிருக்கவில்லையா? அப்படியானால் நான் உங்களுக்கு கூறிக்கொள்கிறேன். நான் உங்களுக்கு கூறியிருப்பது சத்தியமாயிருந்தால், அவர் அதை சத்தியமென்று நிரூபித்திருந்தால், அப்பொழுது நான் உங்களுக்கு இப்பொழுது சத்தியத்தையே கூறிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களேயானால், உங்களுடைய ஞானத்திலிருந்து அல்ல, ஆனால் இருதயத்திலிருந்து ஏற்றுக்கொள்வீர்களேயானால், நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுதே சுகமடைய முடியும். நீங்கள் சர்வவல்லமையுள்ளத் தேவனுடையப் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்றும், அவர் இங்கு இப்பொழுது இருக்கிறார் என்று இப்பொழுது நீங்கள் அதைத் தீர்மானிப்பீர்களேயானால், இந்தக் கட்டிடத்தைவிட்டு ஒரு நபரும் பலவீனமானவராகப் போக வேண்டியதில்லை. நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால், நாம் ஒவ்வொருவரும் பரிபூரணமான முழு சுகத்தோடு போக முடியும். அவர் இங்கே என்னுடைய ஜெபத்திற்கு செவிகொடுப்பாரேயானால், அவர் அங்கிருந்தும் என்னுடைய ஜெபத்திற்கு செவிகொடுப்பார். அவர் என்னுடைய ஜெபத்திற்கு மாத்திரமே செவி கொடுக்கிறார் என்றில்லாமல், அவர் உங்களுடைய ஜெபத்திற்கும் செவி கொடுப்பார். 196 இப்பொழுது வேதம், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. வேதம், “அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார்” என்று கூறியுள்ளது. அவர் அதை நிரூபித்திருக்கிறார். அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 197 இப்பொழுது நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். இயேசு பூமியை விட்டுச் செல்வதற்கு முன்னர் அவர் தம்முடையக் கடைசி வார்த்தைகளாக, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று இதைக் கூறினார். இங்குள்ள எத்தனைபேர் விசுவாசிகளாய் இருக்கிறீர்கள்? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் இப்பொழுது விசுவாசிகளாய் இருக்கிறீர்கள். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” அந்த வாக்குத்தத்தம் உண்மைதானே? [“ஆமென்.”] நல்லது, நீங்கள் விசுவாசிகளாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் கரங்களை வைத்துள்ளீர்கள். அப்படியானால் வேதமே சரியானதாயுள்ளது. 198 இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவருக்காக ஜெபியுங்கள், அப்படியே உங்களுடைய சொந்த சபையில் செய்கிற விதமாகச் செய்யுங்கள். உங்களுடையக் கரங்களை ஒருவர் மற்றொருவர் மீது வைத்து, நீங்கள் இப்பொழுது உங்களுடையக் கரங்களை ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கையில், ஒவ்வொருவரும் மற்றவருக்காக ஜெபியுங்கள். நான் இப்பொழுது ஜெபிக்கையில், அப்படியே ஒருவர் மற்றொருவருக்காக ஜெபியுங்கள். 199 ஓ கர்த்தாவே, இன்றிரவு நீர் வருவீரேயானால், உம்முடைய சபையை ஏற்றுக்கொள்ளுவீர். நாங்கள் சாக்கு போக்கின்றி இருக்கிறோம். நீர் இங்கே இருக்கிறீர். சுவற்றின் மேல் தொங்குகிற இந்தப் புகைப்படத்தைப் போன்றே, இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அக்கினி ஸ்தம்பமாய் இன்றிரவும் நீர் மாறாத அதே தேவனாய் இன்னமும், அதே வல்லமையோடும், அதே கிரியை நடப்பித்தல்களோடும் இருக்கிறீர். நீர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருக்கிறீர். நீர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருக்கிறீர் என்பதற்கு இதுவே நிரூபணமாய் உள்ளது. இப்பொழுதும் தேவனாகியக் கர்த்தாவே, ஜனங்களுடைய இருதயங்களில் ஒரு மகத்தான கிரியைச் செய்யும். ஒவ்வொரு பாவத்தையும் மன்னியும், ஒவ்வொரு வியாதியையும் சுகப்படுத்தும். கர்த்தாவே, அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளியும். இப்பொழுதே உம்முடைய ஊழியக்காரனுடைய ஜெபத்திற்கு செவிகொடும். 200 நான் இப்பொழுதே ஒவ்வொரு வியாதியையும், ஒவ்வொரு பிசாசையும், ஒவ்வொரு பிசாசின் வல்லமையையும் கடிந்துகொண்டு, பிசாசினிடத்தில், “தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனங்களை விட்டு வெளியேப் போ. அவர்களை விட்டு வெளியேப் போ” என்றுக் கூறுகிறேன். இந்த ஜனங்களை விட்டுப் போ. அவர்கள் தங்களுடையக் கரங்களை ஒருவர் மீது வைத்திருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள். சாத்தானே வெளியே வா. நான் இயேசுவின் நாமத்தில் உனக்கு கட்டளையிடுகிறேன். வெளியே வந்து, இருளுக்குள்ளாக எறியுண்டு போவாயாக, இனி அவர்களை ஒருபோதும் தொல்லைப்படுத்தாதிருப்பாயாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 201 தேவன் இப்பொழுது உங்களைச் சுகப்படுத்தியிருக்கிறார் என்று உங்களில் எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடையக் காலூன்றி எழும்பி நில்லுங்கள்; நீங்கள் ஒரு முடமானவராய் இருந்தால், எப்படியாவது எழும்பி நில்லுங்கள். அதுதான் இது. நீங்கள் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? இங்கே நடக்க முடியாமல் முடமானவராய் எவரேனும் இருப்பீர்களாயின், இருக்கைகளுக்கு இடையேயுள்ள வழிநடைப் பாதையில் மேலும் கீழுமாய் நடவுங்கள். இங்கே எவருக்கேனும் ஒரு காது செவிடாய் இருந்தால், உங்களுடைய விரலை அந்த நல்லக் காதில் வைத்து அடைத்துக்கொண்டு, அந்த பாதிக்கப்பட்ட காதிலிருந்து கேட்டுப் பாருங்கள். இங்கே எவரேனும் அவதியுற்று, தங்களுடையக் கரத்தை மேலே உயர்த்த முடியாமலிருந்தால், மேலே உயர்த்துங்கள். கிறிஸ்து…அவதியுற்றிருந்த அவர்களுடையக் கரங்கள், அந்தக் கரங்கள் மேலே செல்வதைப் பாருங்கள்—நோக்கிப் பாருங்கள். ஆமென். அவர் இங்கே இருக்கிறார் என்று நான் கூறினேன். 202 சரி, சகோதரி கெர்ட்டி. அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார்; கிறிஸ்து இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறாரே! அவர் என்னோடு நடக்கிறார், அவர் என்னோடு நெடுக வாழ்க்கையினுடைய நெருக்கமான பாதையில் பேசுகிறார். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பைப் பகிர்ந்தளிக்கவே! அவர் ஜீவிக்கிறார் என்று எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் என்னை கேட்டுப்பாருங்கள், அவர் என்னுடைய இருதயத்திற்குள் ஜீவிக்கிறார். 203 மீண்டும் எல்லாருமே பாடுவோமாக! [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடையக் கரங்களைத் தட்டத் துவங்குகிறார்.—ஆசி.] அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார்; கிறிஸ்து இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறாரே! அவர் என்னோடு நடக்கிறார், அவர் என்னோடு நெடுக வாழ்க்கையினுடைய நெருக்கமான பாதையில் பேசுகிறார். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பைப் பகிர்ந்தளிக்கவே! அவர் ஜீவிக்கிறார் என்று எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் என்னை கேட்டுப்பாருங்கள், அவர் என்னுடைய இருதயத்திற்குள் ஜீவிக்கிறார். 204 இந்த மகத்தான கூட்டத்தினர், “அல்லேலூயா” என்று கூறட்டும். [சபையோர், “அல்லேலூயா” என்கின்றனர்.—ஆசி.] கர்த்தர் ஜீவிக்கிறாரே! [“கர்த்தர் ஜீவிக்கிறாரே!”] அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்! [“அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்!”] அல்லேலூயா! [“அல்லேலூயா!”] அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறாரே! (நாம் நம்முடைய கரங்களை அவருக்கு அசைத்துக் காட்டுவோமாக.) இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறாரே! அவர் என்னோடு நடக்கிறார், அவர் என்னோடு நெடுக வாழ்க்கையினுடைய நெருக்கமான பாதையில் பேசுகிறார். அவர் ஜீவிக்கிறார், அவர் ஜீவிக்கிறார், இரட்சிப்பைப் பகிர்ந்தளிக்கவே! அவர் ஜீவிக்கிறார் என்று எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் என்னை கேட்டுப்பாருங்கள், அவர் என்னுடைய இருதயத்திற்குள் ஜீவிக்கிறார். 205 எத்தனைப் பேர் அந்தப் பழையப் பாடலை விரும்புகிறீர்கள், “ஆமென்!” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] உங்களுக்குப் பக்கத்தில் உள்ள நபரோடு கரங்களைக் குலுக்குங்கள். நீங்கள், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுங்கள். [“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!”] கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! சரி. என்னுடைய விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது. ஓ, எப்படி அற்புத… …விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, நீரே கல்வாரியின் ஆட்டுக் குட்டி, தெய்வீக இரட்சகரே; நான் ஜெபிக்கையில் இப்பொழுதே எனக்கு செவிகொடும், என்னுடைய எல்லா குற்றத்தையும் எடுத்துப்போடும், ஓ இந்த நாளிலிருந்தே நான் முழுவதும் உம்முடையவனாயிருப்பேனாக! 206 நாம் இப்பொழுது பயபக்தியாய் எல்லாம் வல்ல, சர்வ வல்லமையுள்ளத் தேவனின் பிரசன்னத்தில் நம்முடையத் தலைகளை வணங்குவோமாக. தேவனாகியக் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதத்தை ஒவ்வொருவருக்கும் அருள்வாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்ததாயிருக்கிறதை உங்களுக்கு முழுநிறைவாய்த் தருவாராக. அருடைய கிருபை உங்கள் மேல் தங்கியிருப்பதாக, ஒவ்வொருவரும் தங்களுடையச் சுகத்திற்காக எழும்புவார்களாக. அதை ஒருபோதும் மறுத்துவிடாதீர்கள். அநேகர் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டீர்கள். கிறிஸ்து இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். 207 நாங்கள் அந்நியர்களாகிய உங்களை மீண்டும் எங்களுடையக் கூடாரத்திற்கு, எங்களுடைய ஆராதனைக்கு அழைக்கிறோம். 208 நான் பேசும்படியாக அபிஷேகமானது ஒரு நிமிடம் என்னைவிட்டுப் போகும்படியாகவே சற்று முன்னர் நான் பாடினேன். நீங்கள் இங்கே இருந்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களோடிருப்பது ஒரு மகத்தான நாளாகவே இருந்தது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 209 அடுத்த ஞாயிற்றுக் கிழமை கூடாரத்தில் இராபோஜனமும், பாதங்களைக் கழுவுதலும் உள்ளது. ஜனங்களாகிய உங்களில் எவரேனும் எங்களுடையச் சுற்றுப்புற வட்டாரத்தில் இருப்பவர்களாயிருந்தால், நீங்கள் வந்து எங்களை விசாரித்து விட்டுச் செல்லுங்கள். நாம் மீண்டும் சந்திக்கும் வரையில் எங்களுக்காக ஜெபியுங்கள். 210 நாம் இப்பொழுது நம்முடையத் தலைகளை வணங்குவோமாக. போதகர் வந்து நம்மை கலைந்து செல்லும்படியாகக் கூற அல்லது அவர் விரும்புகிறதைக் கூறும்படிக்கு நாங்கள் கேட்டுக் கொள்ளப்போகிறோம்.